Skip to main content

Advertisement

General

5 லட்சம் பேரை ஈர்க்க இலக்கு நிர்ணயித்த 24ஆவது தீபாவளிக் கண்காட்சி!

புகைப்படம்: gobindsinghdeo (Instagram)

 

Advertisement

இந்த ஆண்டு நடைபெறும் அஜெண்டா சூரியா கம்யூனிகேஷனின் 24ஆவது தீபாவளிக் கண்காட்சிக்கு 500,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கண்காட்சி தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கான இடமாக மட்டுமின்றி, உள்ளூர் வணிகர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் தங்களது வியாபாரத்தில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

புகைப்படம்: gobindsinghdeo (Instagram) 

 

டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ, தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இக்காலத்தில், வணிகர்களும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களது வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் சுமார் 360,000 பேர் கலந்துகொண்டதாக அதன் ஏற்பாட்டாளர் ஜக்கராவ் சிமான்சா தெரிவித்தார். இவ்வாண்டு கண்காட்சியின் முதல் இரண்டு நாட்களிலேயே சுமார் 80,000 பேர் வருகை தந்துள்ளதால், 500,000 பேர் என்ற இலக்கை அடைய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கிய இக்கண்காட்சி நவம்பர் 7ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் தீபாவளிக்குத் தேவையான பொருட்கள், ஆடைகள் மற்றும் பல்வேறு உணவு வகைகளை விற்பனை செய்யும் 450க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற்றுள்ளன.

புக்கிட் ஜலீல் தேசிய விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் இக்கண்காட்சியைப் பொதுமக்கள் தினமும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இலவசமாகப் பார்வையிடலாம்.

மூலம்: பெர்னாமா