Skip to main content

Advertisement

Unitedடுக்கு இன்னும் வாய்ப்பு உண்டு!

 

 

இப்பருவ EPLகை நல்லபடியாக முடிக்க Man Unitedடுக்கு இன்னமும் வாய்ப்புள்ளது!

40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாகப் பருவத்தைத் தொடக்கி, கடும் விமர்சனங்களுக்குள்ளாகிய Unitedடின் நிலை குறித்து, அதன் நிர்வாகி Micheal Carrick அவ்வாறு கூறியிருக்கிறார்.

பருவம் தொடங்கி ஏழு லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், அவற்றுள் ஒன்றில் மட்டுமே United வெற்றிப் பெற்றது.

நேற்று Leedsசுடனான ஆட்டத்திலும் அவ்வணி 1-1 என சமநிலையே கண்ட பிறகு,ம் செய்தியாளர் சந்திப்பில் Carrick அந்த நம்பிக்கையைக் கொடுத்தார்.

புள்ளிப்பட்டியலில் Leeds ஏழாம் இடத்திலும் United 13ஆம் இடத்திலும் உள்ளன.

----- 

இதனிடையே இப்பருவ EPLகில் ஆறாவது வெற்றியை ஈட்டியிருக்கிறது நடப்பு வெற்றியாளரான Arsenal!

நேற்று Nottingham Forestடைச் சந்திக்க ஆட்டத்தில் அவ்வணி 1-0 என வெற்றிப் பெற்றது.

அவ்வெற்றியை அடுத்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் Man Cityயை விட மூன்று புள்ளிகள் குறைவாகக் கொண்டு இரண்டாம் இடத்தில் இருக்கிறது Gunners.

------ 

இப்பருவத்தின் தனது பத்தாவது மற்றும் 11ஆவது கோலை போட்டுள்ளார் Kylian Mbappe!

Real Madrid 4-1 என Sevillaவை வீழ்த்திய ஆட்டத்தில் அவர் அவ்விரு கோல்களையும் போட்டார்.

------ 

 

மலேசிய சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் JDT 3-0 என திரங்காணு FCயைத் தோற்கடித்தது!

 

DPMM, Kuching Cityயை 3-2 என வென்றது.

 

 

RAAGA Aaha Siranta Isai!