
உலகப் பூப்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தையே, தேசிய ஆடவர் இரட்டையர் Arif Junaidi - Yap Roy King, சிறப்பாகத் தொடங்கியுள்ளனர் !
அவ்வாட்டதில், அந்த ஜோடி, வியட்நாமிய இணையை வீழ்த்தி, அடுத்த சுற்றில் காலடி எடுத்து வைத்தனர்.
மகளிர் இரட்டையர் Ong Xin Yee - Carmen Ting-கும், அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.
அதே வேளை, ஆடவர் ஒற்றையர் Leong Jun Hao, Brazil விரரை தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு தகுதியானார்.
உலகப் பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.
---------
Bahrain Grand Prix Formula 1 பந்தய போட்டிக்கான, 200 ரிங்கிட் முதல் ஆரம்பமான விலையுள்ள Madani டிக்கெட்டுகள், முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளன !
பொதுமக்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியதையடுத்து, மலேசியர்களிடையே அந்த டிக்கெட்டுகளுக்கு வலுவான வரவேற்பு கிடைத்துள்ளதாக, சிலாங்கூர் செப்பாங் அனைத்துலக பந்தயத் தளம் கூறியதாக, இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்தது.
அப்போட்டி, அக்டோபர் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.
-------
பிரிமியர் லீக் வெற்றியாளரான Arsenal, இப்பருவத்தில் அனைத்து பட்டங்களையும் வென்று குவிக்க விரும்புகின்றதாம் !
அவ்வணியின் கேப்டன் Martin Odegaard, அவ்வாறு கூறி எதிரணிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.
Community Shield கால்பந்தாட்ட இறுதியாட்டத்தில், ஆர்செனல், 3-0 என Manchester City-யை வீழ்த்தியது.
அந்த வெற்றியில் சிறப்பாக விளையாடிய Odegaard, ஆர்செனலுக்கான 3-ஆவது கோலை போட்டு, ஆட்டநாயகன் என்ற பெயரையும் பெற்றார்.
--------
Arsenal, Gabriel Martinelli-யை Galatasaray-க்கு விற்கும் முயற்சி தோல்வியடைந்த போதிலும், அவரை ஒப்பந்தம் செய்ய நாடி வரும் விண்ணப்பத்தை ஏற்க தயாராக இருக்கின்றதாம் !
Galatasaray-க்கு செல்ல விருப்பம் இல்லாததால், அக்கிளப்பில் இருந்து வந்த விண்ணப்பத்தை, Martinelli நிராகரித்துவிட்டார்.