
நாளைய Champions லீக் கால்பந்தாட்டத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன யுரோப்பிய ஜாம்பவான்களான PSGயும் Barcelonaவும்!
அவ்விரு கிளப்புகளுமே இரு தொடக்க ஆட்டத்தில் வெற்றிப் பெற்றுவிட்டன.
PSGயோ எல்லா போட்டிகளிலும் 19 கோல்களைப் போட்டு தொடர்ந்து ஆறு ஆட்டங்களில் வெற்றிப் பெற்று வந்துள்ளது.
Barcelonaவோ 48 கோல்களுடன் இப்பருவத்தின் அனைத்து 11 ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவுச் செய்திருக்கிறது.
அவ்விரு கிளப்புகளும் மோதும் விருவிருப்பான ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை நாளை அதிகாலை மூன்று மணி தொடங்கி, Astro அலைவரிசை 820 மற்றும் சூக்காவில் காணலாம்.
-----
எகிப்து கால்பந்து அணி பயிற்றுனரை மூன்று ஆட்டங்களுக்கும் அதன் தாக்குதல் வீரர் Mostafa Zicoவை ஐந்து ஆட்டங்களுக்கும் தடை செய்துள்ளது உலக கால்பந்து அமைப்பு!
2026 கால்பந்து திருவிழாவில் அர்ஜெண்டினாவிடம் அவ்வணி 2-3 என வீழ்ந்த ஆட்டத்தில் நடுவர்கள் ஒருதலை பட்சமாக நடந்துக் கொண்டதாகக் கூறி, சர்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்காக அவர்கள் மீது அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-----
Liverpoolலில் தாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் Barcelonaவிலிருந்து நிரந்தரமாக வந்துவிடுவதைப் பற்றி கலந்து பேச அவசரம் காட்டப் போவதில்லை!
அவ்வாறு கூறியுள்ளார் Anfieldடில் பருவம் முழுவதும் இரவலில் விளையாடவிருக்கும் Ronald Araujo.