Skip to main content

Advertisement

மலேசியாவுக்கு 6-வது தங்கம் வென்று, Wong Kar Gee சாதனை!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு 6-வது தங்கப் பதக்கத்தைப் பெற்று தந்து பெருமை சேர்த்துள்ளார், தேசிய பாரா நீளம் தாண்டுதல் வீரர் Wong Kar Gee!

அச்சாதனை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறிய அவர், தனது செயல்திறனை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோத்தா கினபாலுவில் பிறந்த அவர், ஆடவர்களுக்கான T12 நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று, மலேசியாவின் 6 தங்கப் பதக்க இலக்கை அடைய உதவினார்.

நீச்சல் வீரர்களான Abd Halim Mohammad வெள்ளிப் பதக்கத்தையும், Shafiq Abdullah வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.  

அதன் வழி  நீச்சல் போட்டிகளில் மலேசியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

--

France பொது பூப்பந்து போட்டியில், 5 தேசிய பிரதிநிதிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்!

தேசிய மகளிர் இரட்டையர் Pearly Tan-M. Thinaah, ஆடவர் இரட்டையர் Aaron Chia-Soh Wooi Yik, Goh Sze Fei- Nur Izzuddin, கலப்பு இரட்டையர் man wei chong - tee kai wun அவர்களில் அடங்குவர்.

Pearly Tan-M. Thinaah, அடுத்து அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் போராட்டத்தில் Bulgaria இணையான Stoeva சகோதரிகள் Gabriela Stefani யோடு மோதவுள்ளனர்.

France பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிப்பரப்பை Astro அலைவரிசை 815, 816 மற்றும் Sooka-வில் காணலாம்.

--

Silicon Valley பொது ஸ்குவாஷ் போட்டியில் தேசிய மகளிர் ஸ்குவாஷ் தாரகை எஸ். சிவசங்கரி,சக நாட்டு வீராங்கனை ரேச்சல் அர்னால்டைத் தோற்கடித்து, அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்

--

யூரோப்பா லீக் தொடரில் Bournemouth  AC Milanஐ 3- சுழியம் என வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

RAAGA Aaha Siranta Isai!