Skip to main content

Advertisement

மாற்று வீரர்களை சாதாரணமாக நினைக்கக் கூடாது !

 

Arsenal-லின் மாற்று வீரர்களின் பலத்தை, அதன் நிர்வாகி Mikel Arteta பாராட்டியுள்ளார் !

பிரீமியர் லீக் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்வதில், மாற்று வீரர்கள் முக்கியப் பங்கு வகிப்பர் என Arteta சொன்னார்.

Nottingham Forest-டுக்கு எதிரான நேற்றைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய Noni Madueke அடித்த கோலால், Arsenal, 1-0 என வெற்றிப் பெற்றதை அடுத்து, Arteta அவ்வாறு கூறினார்.

அவ்வெற்றியை அடுத்து, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள Manchester City-யை விட மூன்றே புள்ளி வித்தியாசத்தில், Arsenal, இரண்டாவது இடத்தில் உள்ளது.

----------

ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கிய பயணத்தில் ஒரு பாடம் என, தேசிய பூப்பந்து வீரர்கள் நினைவில் கொள்ள வேண்டும் !

முன்னாள் பூப்பந்து நட்சத்திரம் Datuk Seri Lee Chong Wei, அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தோல்விகளைச் சந்தித்தாலும், வீரர்கள் தங்கள் மீதான நம்பிக்கையை இழக்கக் கூடாது என்றும், வெற்றியை அடைய சிறிது காலம் பிடிக்கும் என்பதால், விடாமுயற்சியோடு செயல்படுவது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Low Zi Yu-Genevie Lim, இளையோருக்கான உலக பூப்பந்து போட்டியிலும், Pearly Tan-M. Thinaah டென்மார்க் பொது பூப்பந்து போட்டியிலும், பட்டங்களை வென்று வரலாறு படைத்ததைத் தொடர்ந்து, Lee Chong Wei அவ்வாறு கூறினார்.

---------

சமூக ஊடகங்களில் பரவி வரும் 2026 Larian Srikandi ஓட்ட நிகழ்வு தொடர்பான சுவரொட்டியில் உள்ள இணைப்புகளைத் திறக்கவோ, QR குறியீடுகளை Scan செய்யவோ வேண்டாம் என, பஹாங் விளையாட்டு மன்றம் பொதுமக்களை எச்சரித்துள்ளது !

நவம்பர் 7-ஆம் தேதி Sukpa விளையாட்டு வளாகத்தில் நடைபெறவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ள அந்த நிகழ்வைத், தாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றும், அதன் விளம்பரம் மற்றும் பதிவுகளுக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் அம்மன்றம் தெரிவித்தது.

RAAGA Aaha Siranta Isai!