
SARA உதவித் திட்டம், புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளிட்ட, சத்தான உணவுப் பொருட்களை வாங்கும் வகையில் விரிவுபடுத்தப்படவுள்ளது !
இந்த பரிந்துரைக்கு, இன்று நடைபெற்ற வாழ்க்கைச் செலவின தேசிய நடவடிக்கை மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.
அரசாங்க உதவி, மக்களின் அன்றாட செலவுகளைச் சமாளிக்க உதவுவதுடன், அவர்கள் ஆரோக்கியமான உணவுகளைப் பெறுவதற்கான வாய்ப்பையும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
----------
நாட்டை பாதித்து வரும் புகைமூட்ட நிலை, அடுத்த சில நாட்களில் பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது !
அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது, காற்றின் தரத்தை மேம்படுத்தும் அளவுக்கு போதுமானதாக இருக்காது என்றும் அது கூறியது..
--------
இதனிடையே, நாட்டில் 10 இடங்களில், காற்றின் தரத்தைக் குறிக்கும் API குறியீடு அரோக்கியமற்ற நிலையில் உள்ளது !
சரவாக், KL, சிலாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில், காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக இருக்கின்றது.
---------
போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில், இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய விமானி ஒருவரிடம் விசாரணை நடத்த, மலேசிய காவல்துறைக்கு, இந்தோனேசிய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர் !
அது தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு, தேவையான கால அவகாசத்தை வழங்கும்படி, உள்துறை அமைச்சு, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
---------
சிலாங்கூர் Bandar Utama பள்ளியில், தனது 16 வயது சக மாணவியைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இளைஞர், தற்காப்பு வாதம் புரியும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது !