
பகடிவதையில், ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவரது பெற்றோர்களும் இணைந்து, எந்தவொரு தண்டனையையும் அல்லது சட்டப் பொறுப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் !
பகடிவதை தடுப்பு நடுவர் மன்ற மசோதாவில், அது குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் செய்யும் ஒழுக்கக் குற்றங்களுக்கு, பெற்றோர்களும் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் எனும் நோக்கில், அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, சட்ட சீர்திருத்த அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது, பகடிவதைத் தடுப்பு சட்டம் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு மட்டுமே உள்ளது.
எனினும், எதிர்காலத்தில் அதனை விரிவுபடுத்த வேண்டிய தேவையை, அரசாங்கம் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும் என அமைச்சு மேலும் சொன்னது.
---------
மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில், MACC கேடட் படை என்ற முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது !
ஊழலுக்கு எதிரான மனப்பான்மையையும், நேர்மையின் முக்கியத்துவத்தையும், சிறு வயதிலிருந்தே மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கில், அந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டம், கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் என MACC தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.
---------
மேலும் சில செய்திகள் சுறுக்கமாக ;
மிட்டாய்களில் போதை மருந்து மாதிரியான தடைச்செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக, இதுவரை புகார் ஏதும் கிடைக்கவில்லை !
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த தகவலை ஆதாரம் இன்றி உண்மை என கூறிவிட முடியாது என, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
----------
ஜப்பானில் உள்ள மிருகக்காட்சிசாலையில் தற்போது இருக்கும், மூன்று மலேசிய யானைகளின் நிலை குறித்த புதிய அறிக்கை, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படும் !
அவ்வறிக்கை அடுத்த மாதம் 22-ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.