Skip to main content
நேபாள பேரிடரில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு குறைவே !

சீனா நேபாள நிலச்சரிவு பெருவெள்ளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது!

ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு குறைந்து வருகிறது என வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan தெரிவித்துள்ளார்.

தேடுதல் பணிகள் முடிந்து நேபாளம் மீட்புப் பணிகளுக்கு மாறியிருந்தாலும், மலேசியத் தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என அவர் கூறினார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் மலேசியர்கள் தங்களின் பயண விவரங்களை e-Konsular இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு 6,000-க்கும் சற்று அதிகமானோர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் பேரிடர் மாதிரியான அவசரநிலை ஏற்பட்டால் உதவுவதற்கு, பயணிகள் தங்களின் இருப்பிடம் மற்றும் தொடர்பு எண்களைப் பதிவு செய்து புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

--

வாகனங்களுக்கு உரிமையாளர்களின் பெயர்களைப் பதிவு எண்களாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதில்லை !

அதிலிருந்து அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பிருந்தாலும் அது சாத்தியப்படாத ஒன்று என போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள எழுத்துகள் மற்றும் எண்களைக் கொண்ட பதிவு முறையே தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும், ஆண்டுதோறும் இரண்டு அல்லது மூன்று சிறப்புப் பதிவு எண் தொடர்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

--

நாட்டில் Waze செயலி பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை !

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமே அத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் தலைமை இயக்குநர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திரம் இரண்டுக்கும் இடையில் சமநிலை தேவை தான் என்றாலும், எதிர்கால பாதுகாப்பு நிலையை வலுப்படுத்தும் நோக்கில் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பதும் அவசியம் என அவர் கூறினார்.

--

சுற்றுச்சூழல் துறையின் ஆகக் கடைசி தகவ்ல் படி, நாட்டில் 17 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

KL, Putrajaya, மற்றும் ஜொகூர், மலாக்கா, நெகெரி செம்பிலான், சிலாங்கூர் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகள் அதிலடங்கும் .

--

பினாங்கு , பேராக், பஹாங், மலாக்கா, சிலாங்கூர், நெகெரி செம்பிலான்,  சபா, சரவாக் மற்றும் கூட்டரசு பிரதேசங்ளிலும் சில பகுதிகளில் காலை மணி 9 வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.

 

RAAGA Aaha Siranta Isai!