Skip to main content

Advertisement

Zii Jia, ஆசிய விளையாட்டுக்குப் போகவில்லையா ?

 

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தேசிய பூப்பந்து அணியில், ஆடவர் ஒற்றையர் வீரர் Lee Zii Jia இடம்பெறாதது, அவரது சொந்த முடிவே !

தேசிய அணியில் இணைய Zii Jia-வுக்கு முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், தனது தற்போதைய ஆட்டத்திறன் இன்னும் சிறந்த நிலையை எட்டவில்லை எனக் கருதி. Zii Jia விலக முடிவு செய்ததாக, மலேசிய பூப்பந்து சங்கம், Berita Harian-னிடம் தெரிவித்துள்ளது.

எனவே, BAM, அவரின் முடிவை மதித்து, நாட்டுக்காக களமிறங்கும் வாய்ப்பை, இளம் வீரர்களுக்கு வழங்கி, அடுத்தக்கட்ட விஷயத்தை நோக்கி பயணம் செய்வதாக தெரிவித்துள்ளதாம்.

---------

சீன பொது பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Goh Soon Huat - Shevon Lai, 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் !

முதல் சுற்றில் அவர்கள், ஜப்பானிய இணையை வீழ்த்தினர்.

அதே வேளை, மகளிர் ஒற்றையர் Wong Ling Ching தோல்வியுற்று வெளியேறினார்.

---------

கால்பந்து திருவிழாவில் பல சர்ச்சைகள் எழுந்த போதிலும், அர்ஜென்டினா, தங்களால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக Enzo Fernandez தெரிவித்துள்ளார் !

இறுதியாட்டத்தில், தாம் சிவப்பு அட்டை பெற்றது உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு மத்தியிலும், தமதணி, களத்தில் சூடோடு சூடாக விளையாடியது நன்கு உணரப்பட்டதாக, அந்த மத்தியதிடலாட்டக்காரர் கூறினார்.

அவ்வாட்டம், முடிவடைய சில நிமிடங்களுக்கு முன்பு Spain வீரர் ஒருவர் மீது கடுமையாக மோதியதால், அவர், இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று, திடலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

---------

நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் Robert Lewandowski, நாளைய Inter Miami-க்கு எதிரான MLS லீக் ஆட்டத்தில், Chicago அணிக்காக, முதன் முறையாக களமிறங்கவுள்ளார்.

37 வயதான Lewandowski, கடந்த 20 ஆண்டுகளாக நீண்ட ஐரோப்பிய கால்பந்து பயணத்தை முடித்துக்கொண்டு, இம்மாத தொடக்கத்தில், Chicago-வில் இணைந்தார்.

RAAGA Aaha Siranta Isai!