
கால்பந்து திருவிழா இறுதியாட்டத்தில், Spain வெற்றிப் பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது !
கூடுதல் நேரத்தில், Ferran Torres, அடித்த வெற்றி கோல் மூலம், Spain 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
90 நிமிட ஆட்ட நேரம் வரை, இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதனிடையே, Enzo Fernandez-சுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டதால், அர்ஜென்டினா, கூடுதல் நேரத்தை 10 வீரர்களுடன் விளையாடியது.
2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு, Spain இரண்டாவது முறையாக உலக மகுடத்தை வென்றுள்ளது.
இதனிடையே, Spain கேப்டனான Rodri, இந்த கால்பந்து திருவிழாவின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
8 ஆட்டங்களில், ஒரு கோலை மட்டுமே கோட்டைவிட்ட Spain கோல் காவலர் Unai Simon, சிறந்த கோல் காவலருக்கான விருதைத் தட்டிச் சென்றார்.
மற்றொரு பக்கம், France தேசிய அணியின் கேப்டன் Kylian Mbappé, தங்கக் காலணி விருதை வென்றுள்ளார்.
இதையடுத்து, தொடர்ந்து இரண்டு கால்பந்து திருவிழாக்களில், அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை Mbappé, படைத்துள்ளார்.
அவர் அடித்த 10 கோல்கள், Lionel Messi-யை விட 2 கோல்கள் அதிகமாகும்.
---------
பெல்ஜிய F1 GP பந்தய போட்டியில், Kimi Antonelli வெற்றி பெற்றுள்ளார் !
Charles Leclerc இரண்டாவது இடத்தைப் பிடித்த வேளை, Max Verstappen 3-ஆவது இடத்தை வென்றார்.