
நெகிரி செம்பிலானில், மந்திரி பெசார் பதவியில், எந்தவொரு மாற்றமும் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது !
Datuk Ismail Lasim, சற்று முன்னர், மாநில சமஸ்தானாதிபதியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மந்திரி பெசாராகப் பொறுப்பில் நீடிக்க தமக்கு, அரச ஒப்புதல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதற்காக, மாநில சமஸ்தானாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவர், தொடர்ந்து அவருக்கு விசுவாசமாகச் செயல்படப் போவதாகவும் உறுதியளித்தார்.
இதனிடையே, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகின்றது.
அந்தப் பட்டியல் பின்னர் ஒப்புதலுக்காக அரண்மனைக்குச் சமர்ப்பிக்கப்படும்.
----------
சாலைப் பகடிவதை மற்றும் ஆக்ரோஷமான முறையில் வாகனமோட்டும் செயல்கள், ஒரே காரணத்தால் ஏற்படுவதில்லை !
அவற்றுக்கு, உளவியல், போக்குவரத்து மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பான பல்வேறு காரணங்கள் இருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அப்பிரச்சினையைக் கையாள, ஓட்டுநர்களுக்கான கல்வியை வலுப்படுத்துதல், தொழில்நுட்பம் சார்ந்த சட்ட அமலாக்கத்தை மேம்படுத்துதல், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்தல் என, 3 முக்கிய அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதனிடையே, , களைப்பு, மன அழுத்தம், போக்குவரத்து நெரிசல் ஆகியவை, ஓட்டுநர்களின் கவனத்தையும் பொறுமையையும் பாதிக்கக்கூடும் என்றும் அமைச்சு கூறியது.
----------
பேராக் Sungai Siput-டில், Asli ஆடவரைக் கொன்றதாக நம்பப்படும் புலி, வனவிலங்கு துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது !
இவ்வார மத்தியில், அந்த Asli ஆடவர், மூங்கில் சேகரித்துக் கொண்டிருந்தபோது புலியின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து, காட்டுப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனவிலங்கு அதிகாரி ஒருவரையும், அந்தப் புலி தாக்கியுள்ளது.
தற்காப்புக்காக, அப்புலிக்கு எதிராக அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
---------
Super El Nino பருவத்தை முன்னிட்டு, சிலாங்கூரில், நீர் விநியோகம் 17.4 விழுக்காடு கையிருப்புடன் சீராக இருப்பதாக, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார் !
----------
இதனிடையே, சிலாங்கூரில் வெள்ளத்தால் 1,700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள வேளை, பேராக்கில் ஏறக்குறைய 400 பேரும், நெகிரி செம்பிலானில் 56 பேரும், PPS மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
----------
இன்றிரவு நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, மாலையில் தேசிய புக்கிட் ஜாலில் அரங்கத்துக்குச் செல்லும் சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது !
அந்நிகழ்ச்சிக்குச் செல்லும் வாகனமோட்டிகள், தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டி மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அங்குள்ள போக்குவரத்து குறித்த நிலவரங்களைத் தெரிந்துகொள்ள, Astro Audio Traffic சமூக ஊடகங்களை வலம் வரலாம்.