
SUKMA மற்றும் பாரா SUKMA 2026 போட்டிகளில் பதக்கங்களை வென்ற சிலாங்கூர் வீரர்கள் உள்ளிட்டோருக்கு 6.4 மில்லியன் ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது !
இவ்வாண்டு, இரு விளையாட்டுப் போட்டிகளையும் சிறப்பாக ஏற்று நடத்தியதுடன், விளையாட்டுத் துறையில் தனது திறனையும், சாதனை மரபையும் சிலாங்கூர் நிரூபித்துள்ளதாக, Menteri Besar தெரிவித்துள்ளார்.
SUKMA போட்டியில் சிலாங்கூர் ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டத்தை 10-ஆவது முறையாகக் கைப்பற்றியுள்ளது.
அதே வேளை, 1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, பாரா SUKMA போட்டியிலும், சிலாங்கூர் ஒட்டுமொத்த வெற்றியாளர் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளதாக அவர் கூறினார்.
----------
இதனிடையே, இவ்வாண்டில் சிறந்த விளையாட்டுச் சாதனைகளைப் படைத்த கூட்டரசுப் பிரதேச விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுச் சங்கங்களைப் பாராட்டும் வகையில், 1.19 மில்லியன் ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது !
கூட்டரசு பிரதேச அமைச்சர் Hannah Yeoh அதனை அறிவித்தார்.
2026 சுக்மா விளையாட்டுப் போட்டியில், கூட்டரசுப் பிரதேச அணி 51 தங்கம், 54 வெள்ளி, 52 வெண்கலம் என, மொத்தம் 157 பதக்கங்களை வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒட்டுமொத்த நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
பாரா சுக்மா போட்டியிலும் 13 தங்கம் உள்ளிட்ட 49 பதக்கங்களை வென்று ஆறாவது இடத்தைப் பெற்றது.
---------
Hong Kong பொது பூப்பந்து போட்டியில், இன்று அரையிறுதியில், தேசிய மகளிர் இரட்டையர் Zi Yu Low - Noraqilah Maisarah, சகநாட்டு ஜோடியான Pearly Tan - M.Thinaah-வுடன் நேருக்கு நேர் மோதுகின்றனர் !
அப்போட்டியை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.
----------
சீனா பொது Squash போட்டியில், தேசிய தாரகை S.சிவசங்கரி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் !
--------
Newcastle-லுக்கு எதிரான நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், Arsenal-லின் Bukayo Saka, Martin Zubimendi உட்பட சிலர், காயம் காரணமாக விளையாடமாட்டார்களாம் !
அவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை மணி 1.30-க்கு, Astro அலைவரிசை 811-றிலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.