
2026 சுக்மா விளையாட்டுப் போட்டி, தனக்கு புதிய அத்தியாயமாக இருந்தாலும், 2 தங்கங்களை வென்றது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார், சிலாங்கூர் அணி வீரர் பிரத்தீஷ் அன்புசெல்வன் !
முதன்முறையாக அப்போட்டிக்குச் சென்றது, நல்ல ஓர் அனுபவமாக இருந்ததாகக் கூறிய, பண்டார் உத்தாமா சிலம்ப கிளப்பில் இடம்பெற்றுள்ள 15 வயதேயான பிரத்தீஷ், அது தன்னை இன்னும் மேம்படுத்திக்கொள்ள உந்துதல் பெற வைத்ததாக சொன்னார்.
சுக்மா அனுபவமே இல்லாத பிரத்தீஷுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டு, நீண்ட காலமாக பயிற்சியைத் தவறவிட்டதாக, அந்த கிளப்பின் பயிற்றுநர் யுவராஜ் முரளி கூறினார்.
எனினும், தாம் அவரை காயத்தில் இருந்து மீட்டெடுத்து, குறுகிய காலத்தில் பலமான பயிற்சிகளை வழங்கி, ஆட்டக் யுக்தியை தீட்டியதாக யுவராஜ் சொன்னார்.
இவ்வேளையில், இளம் வீரரான பிரத்தீஷ் இடம்பெற்றுள்ள பண்டார் உத்தாமா சிலம்ப கிளப்பைச் சேர்ந்தவர்களுடன், Astro Audio செய்திப் பிரிவு சிறப்பு நேர்காணல் நடத்தியது.
அந்த நேர்காணலின் போது, அவர்கள் அதனை பகிர்ந்துகொண்டனர்.
--------
ஒலிம்பிக் போட்டிக்கான நேரடி தகுதி வாய்ப்பு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தேசிய ஸ்குவாஷ் வீரர்களுக்கு, கூடுதல் ஊக்கத்தை அளித்துள்ளது !
இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்த, தனது வீரர்கள் தயாராகி வருவதாக, தேசிய அணி நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நாளை தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில், 17 ஆயிரம் விளையாட்டாளர்களும் அதிகாரிகளும் திரள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை, Astro ARENA, Stadiumastro, ஐந்து குறிப்பிட்ட அலைவரிசைகள் மற்றும் Astro Go-வில் காணலாம்.
--------
செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆசியான் கிண்ண போட்டியில், இறுதிச் சுற்று வரை செல்ல வேண்டும் எனும் இலக்கை நிர்ணயித்துள்ளது Harimau Malaya !
மலேசியக் கால்பந்து சங்கத்தின் புதிய தலைவர் அந்த இலக்கை அறிவித்தார்.