Skip to main content

Advertisement

Spain, அரையிறுதிக்கு முன்னேறியது !

2026 காற்பந்து திருவிழா குறித்த செய்திகள் !

Spain, அரையிறுதிச் சுற்றில் கால் பதித்துள்ளது.

இன்று அதிகாலையில் நடைபெற்று முடிந்த காலிறுதியாட்டத்தில், அவ்வணி, 2-1 என பெல்ஜியமை வீழ்த்தியது.

Fabian Ruiz, Mikel Merino ஆகியோர், Spain-னுக்காக தலா ஒரு கோலை போட்டு, ஆட்டத்தை வெற்றியில் முடித்தனர்.

இதையடுத்து, அடுத்த வாரம் அரையிறுதியாட்டத்தில், Spain, France-சுடன் நேருக்கு நேர் மோதுகிறது.

---------

இதனிடையே, ஒட்டுமொத்த Spain அணியே வலிமை மிகுந்தது என, அதன் நிர்வாகி வர்ணித்துள்ளார் !

இன்றைய ஆட்டத்தில், 86-வது நிமிடத்தில் களமிறக்கப்பட்ட Mikel Merino, இரண்டு நிமிடங்களிலேயே, Spain-னை அரையிறுதிக்கு அழைத்த வெற்றி கோலை அடித்ததை சுட்டிக்காட்டி, அவர் இந்த பாராட்டைத் தெரிவித்தார்.

--------

நோர்வேயுடனான நாளைய ஆட்டத்தில், இங்கிலாந்து புதுத்தெம்பு பெற்று விளையாடலாம் !

காரணம், காயத்தில் இருந்த 3 முக்கிய வீரர்கள், அணி பயிற்சிக்குத் திரும்பியிருக்கின்றனர்.

Declan Rice, Marc Guehi, Reece James, ஆகியோரே அம்மூவராவர்.

---------

Atalanta-வின் Éderson-னை ஒப்பந்தம் செய்ய முயற்சியில் இருந்து பின்வாங்கியுள்ளதாம் Manchester United !

இரு அணிகளுக்கும் இடையே நடந்த, ஒப்பந்த பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாகக் கூறப்படுவதே அதற்குக் காரணம்.

அதனால், Éderson, United-க்குச் செல்ல மாட்டார் எனவும், முழுமையாக உடற்தகுதியுடன் இருப்பதாகக் நம்பும் Atalanta, அவரை மீண்டும் அணியில் சேர்க்க தயாராக உள்ளதாகவும், விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RAAGA Aaha Siranta Isai!