Man Unitedடுக்கு எதிரான EPL ஆட்டத்தில், Man City மத்திய திடல் வீரர் Phil Foden-னுக்கு வழங்கப்பட்ட சிவப்பு அட்டை நியாயமானதே !
ஆனால், அதே சம்பவத்தில் ஈடுப்பட்டிருந்த யுனைடெட் கேப்டன் புருனோ Fernandes-சுக்கும் ரெட் கார்டு கொடுத்திருக்க வேண்டும் என்கிறார் City நிர்வாகி Enzo Maresca.
Fernandes-ஐ உதைத்ததற்காக 23-வது நிமிடத்தில் Foden-னுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
VAR தொழில்நுட்பத்தின் மூலம் அம்முடிவை உறுதிப்படுத்திய அதே வேளை, யுனைடெட் கேப்டன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவ்வாட்டத்தில் Foden வெளியேறிய பிறகு பத்து வீரர்களோடு ஆடினாலும், 60ஆவது நிமிடத்தில் Unitedடை 0-1 என வீழ்த்த Erling Haaland போட்ட அந்த ஒரு கோலும் சர்ச்சைக்குள்ளனது.
--
Bournemouth வீரர் Rayan மீது கண் வைத்துள்ளாராம், லிவர்பூல் பயிற்றுநர் Andoni Iraola!
கிளப் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 130 மில்லியன் பவுண்ட் செலவில் அவரை வாங்க அணி நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
--
இதனிடையே, லிவர்பூலில் விளையாடி வரும் Florian Wirtz-ஐ குறி வைத்துள்ளதாம், Bayern Munich!
Anfield –டில் அவரது ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லாததால் லிவர்பூலும் அவர் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாம்.
இந்நிலையில், பாயர்ன் முனிச்கே அவரை மீண்டும் வாங்க தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
--
லா லிகா கிண்ணத்தை Barcelonaவே தக்க வைத்துக் கொள்ள உதவியதாலும், கால்பந்து திருவிழாவில் ஸ்பெயின்-ஐச் Champion ஆக்கியதாலும், Ballon d’Or விருதை வெல்ல தான் தகுதியானவரே என்கிறார் 19 வயதான Lamine Yamal.
Ballon d’Or விருது வரும் அக்டோபர் 26 லண்டனில் வழங்கப்பட உள்ள நிலையில், தானும் Kylian Mbappe வும் தான் உலகின் சிறந்த இரு கால்பந்து வீரர்கள் என அவர் கூறியுள்ளார்.
--