
2026 கால்பந்து திருவிழா
நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது உலக மகுடத்தை வென்று தந்த தனது வீரர்களின் அர்ப்பணிப்பை, Spain தலைமைப் பயிற்றுநர் பெருமையுடன் பாராட்டியுள்ளார் !
இந்த வெற்றிப் பயணத்தில், அவர்களுடன் இணைந்து பயணித்தது ,தனக்கு மிகப்பெரிய கௌரவமாகும், என்றும் அவர் கூறினார்.
அதே வேளை, இறுதியாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினா கோல் காவலர் Emiliano Martínez-சையும் அவர் பாராட்டினார்.
Spain-னுக்கு, யூரோ 2024 கிண்ணத்தையும் வென்று கொடுத்த பெருமை, அந்த பயிற்றுநருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
---------
இதனிடையே, Spain-னின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கொண்டாட வேண்டும் என, இன்று இந்த வெற்றிக்குக்குக் காரணமான Ferran Torres, தெரிவித்துள்ளார் !
இந்த மகுடம், தனக்கோ அல்லது 26 வீரர்களுக்கோ மட்டும் சொந்தமானது அல்ல; 4 கோடியே 70 லட்சம் மக்களுக்கும் உரியது, என்றாரவர்.
மாற்று வீரராக களமிறங்கி, கூடுதல் நேரத்தில், அணியின் வெற்றிக் கோலைப் போட்ட Torres, 2010-ஆம் ஆண்டு முதல் உலக மகுடத்துக்குப் பிறகு, Spain-னின் இரண்டாவது உலக மகுடத்தை கைப்பற்றுவது, கடினமான சவாலாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
-----------
இவ்வேளையில், 10 வீரர்களுடன் விளையாடிய அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்திய தமதணியை, Spain-னின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான Marc Cucurella பாராட்டுத் தெரிவித்துள்ளார் !
கூடுதல் நேரத்தின் போது, அர்ஜென்டினாவின் Enzo Fernandez-சுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு, திடலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
----------
Jordan கால்பந்து சங்கம், தேசிய அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக, மொராக்கோவைச் சேர்ந்த Badou Zaki-யை நியமித்துள்ளது !
ஓராண்டு கால ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.