Skip to main content

Advertisement

Max Dowman-னை புகழும் Arsenal !

 

EFL கிண்ண ஆட்டத்தில், Ipswich Town-னை 4-2  என வீழ்த்திய Arsenal-லின் வெற்றியில் முக்கிய பங்கை வகித்த இளம் வீரர் Max Dowman-னை, அவ்வணியின் பயிற்றுநர் Mikel Arteta, பாராட்டியுள்ளார் !

இப்பருவத்தில் முதல் முறையாக களமிறங்கிய 16 வயதான Dowman, அவ்வாட்டத்தில் 2 கோல்களை அடித்த வேளை, ஒரு முறை கோல் போடவும் உதவினார்.

கடந்த பருவத்தில் 15 வயதில் Arsenal அணிக்காக அறிமுகமான Dowman-னை, Arteta முன்னதாக Lionel Messi-யுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.

கடந்த பருவத்தில் 13 ஆட்டங்களில் விளையாடிய Dowman, மார்ச்சில், Everton-னுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்து, Premier League வரலாற்றில், இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

--------

இதனிடையே, இன்றைய EFL கிண்ண கால்பந்தாட்ட, மூன்றாவது சுற்று ஆட்டத்தில், Tottenham-மை 3-1 என வீழ்த்திய Liverpool-லை, அதன் தலைமை பயிற்றுநர் Andoni Iraola, பாராட்டியுள்ளார் !

அவ்வாட்டத்தின் போது, தமதணி வெளிப்படுத்திய படைப்பு, தமக்கு திருப்தியளித்ததாக Iraola கூறினார்.

தமதணி ஆட்டத்தை கடைசி வரைக்கும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்து, வெற்றியில் முடித்ததாக, Iraola மன நிறைவுடன் சொன்னார்.  

--------

AFC Champions League ஆட்டத்தில், JDT, 1-1 என தாய்லாந்து கிளப்பான Buriram United-டுடன் சமநிலை கண்டது ! 

RAAGA Aaha Siranta Isai!