இக்கட்டான காலக்கட்டத்தில், Man United வழிநடத்துவது தனக்கொன்றும் கஷ்டமில்லை!
அதிலிருக்கும் அழுத்தம் குறித்தும் தமக்கு கவலையில்லை என்கிறார், அணி நிர்வாகி மைக்கேல் கேரிக்.
ஆனால், அதே சமயம் united சிறப்பாகச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் .
கடந்த இரு வாரங்களாக அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதையும் கேரிக் மறுக்கவில்லை.
அணி மீண்டு வர வேண்டும் என்றும், இவ்வார இறுதியில் Fulham-க்கு எதிரான பிரீமியர் லீக் ஆட்டம் அதற்கு தொடக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
EFL கிண்ண கால்பந்தாட்டத்தில், பிரைட்டனிடம் 2-3 என தோல்வியுற்று யுனைடெட் மூன்றாம் சுற்றோடு வெளியேறியதை அடுத்து அவர் அக்கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
--
இதனிடையே, தாக்குதல் வீரர் Luke Shaw அடுத்த பருவத்தில் யுனைடெட்டை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் ஒப்பந்தத்தை நீட்டிக்கும் பேச்சுவார்த்தைகளையும், முயற்சிகளையும் கிளப் இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பதே அதற்கு காரணம்.
--
ஐரோப்பிய மற்றும் கால்பந்து திருவிழா தொடர்களில் ஸ்பெயினுக்கு அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுத் தந்த அணியின் தலைமைப் பயிற்றுநர் Luis De La Fuente, 2032-ஆம் ஆண்டு வரை அந்த தேசிய அணியிலேயே தனது பதவி காலத்தைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளார்.
--
மலேசியக் கால்பந்து சங்கத்தின் புதிய தலைவராக, Datuk Abdul Ghani Hassan தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!
இன்று நடைபெற்ற FAM-மின் சிறப்புக் கூட்டத்திலும், செயற்குழுத் தேர்தலிலும், 25-க்கு 20 வாக்குகளைப் பெற்று அப்பதவிக்கு தேர்வாகியுள்ளார்.