
ஆசிய விளையாட்டுப் போட்டியில், நாட்டுக்காக 2-ஆவது பதக்கத்தை ஈட்டித் தந்த, தேசிய கராத்தே வீரர் சூரியா சங்கர் ஹரி சங்கர், தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார் !
தாம் வென்ற இந்த வெண்கலப் பதக்கம், தனக்காக மட்டுமல்ல, அது நாட்டுக்காகவும் கூட என அவர் சொன்னார்.
இந்த பெரிய போட்டியில் பதக்கம் வென்றது தனக்கு பெருமையாக இருப்பதாக சூரிய கூறினார்.
கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் செய்த தவற்றை, இம்முறை திருத்திக்கொண்டு, களத்தில் முழு முயற்சியுடன், எதிராளியிடம் சண்டைபோட்டதாக, சூரியா கூறினார்.
இன்னும் பெரிய பெரிய போட்டிகளில் வெற்றிபெற்று, தமது முக்கிய இலக்குகளை அடையப் பாடுபடுவேன் என்றும் சூரியா உறுதியளித்துள்ளார்.
சூரியா, 60 கிலோகிராமுக்கு குறைவான ஆடவர் குமித்தே பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்றார்.
--------
இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவை வீழ்த்திய மலேசிய ஆடவர் அணியை, தேசிய பூப்பந்து இரட்டையர் பிரிவு பயிற்சி இயக்குநர் பாராட்டியுள்ளார் 1
மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டம், நாளை இந்தோனேசியாவுக்கு எதிரான கடினமான ஆட்டத்துக்கு முன்னதாக, வீரர்கள் போட்டி நடைபெறும் அரங்குக்குப் பழகிக்கொள்ள உதவியதாக அவர் கூறினார்.
Leong Jun Hao, Justin Hoh, ஒற்றையர் பிரிவு ஆட்டங்களிலும் Goh Sze Fei-Nur Izzuddin, இரட்டையர் பிரிவு ஆட்டத்திலும் வெற்றி பெற்றதால், தேசிய ஆடவர் அணி, மங்கோலியாவை 3-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
---------
இவ்வேளையில், தேசிய ஆடவர் நீச்சல் அணி, 4 by 200 மீட்டர் freestyle பிரிவின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது !
தகுதிச்சுற்றில் ஒட்டுமொத்தமாக 5-ஆவது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, அவ்வணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை, Astro ARENA, Stadiumastro, ஐந்து குறிப்பிட்ட அலைவரிசைகள் மற்றும் Astro Go-வில் காணலாம்.