
கடைசி நேர கோல்கள் மூலம் comeback வெற்றியைப் பதிவுச் செய்து, கால்பந்து திருவிழாவின் இறுதிச் சூற்றுக்குள் நுழைந்துள்ளது அர்ஜெண்டினா!
இங்கிலாந்துடனான இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் இரண்டாம் பாதி வரை கோலின்றி சமநிலையில் இருந்த அவ்வாட்டத்தில் இங்கிலாந்துக்காக Anthony Gordon 55ஆவது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார்.
85ஆவது நிமிடத்துக்கு மேல் Enzo Fernandezசும் Lautaro Martinezசும் அடுத்தடுத்து இரு கோல்களைப் போட்டு அர்ஜெண்டினாவை வெற்றிப் பெறச் செய்தனர்.
திங்கட்கிழமை அதிகாலை நடைபெறும் இறுதிச் சுற்றில் அர்ஜெண்டினா, Spainநைச் சந்திக்கிறது.
மூன்றாம் நிலை வெற்றியாளரை நிர்ணயிக்கும் playoff ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தும் Franceசும் மோதுகின்றன.
-----
இதனிடையே கால்பந்து திருவிழாவில் இருந்து வெளியேறியுள்ள போதிலும், இங்கிலாந்து நிர்வாகி Thomas Tuchelலின் இடத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை!
நடப்பு ஒப்பந்தத்தின் படியே அவரை யூரோ 2028 வரை நீக்குவதில்லை என அணி நிர்வாகம் முடிவுச் செய்துள்ளதாக UK ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
-----
கலப்பு இரட்டையர் Goh Soon Huat- Shevon Lai உட்பட ஐந்து தேசிய பிரதிநிதிகள் ஜப்பானிய பொது பூப்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றனர்.
அவர்களின் ஆட்டங்களை நேரலையாக இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம்.