Skip to main content

Advertisement

JDT-க்கு வெற்றியே !

ஆசிய Champions  லீக் Elite கால்பந்தாட்டத்தில், தாய்லாந்து Buriram United-ஐ சந்திக்கும் JDT, முழு மூன்று புள்ளிகளை லாவகமாகவே பெற்று விடும் !

 

மேலும் அணியில் தற்காப்பு வீரர் Antonio Glauder மற்றும் Medina இருப்பதும் கூடுதல் பலமே என்கிறார் அணியின் முன்னாள் வீரர் S. Subramaniam.

 

அவ்விருவரும் அணிக்கு வலுவான தற்காப்பு அரணை அமைப்பதோடு எதிரணிக்கு சவாலான ஆட்டத்தை கொடுப்பார்கள் என அவர் கூறினார்.

 

ஏழு முறை நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் JDT, Buriram மை ஒரு முறை மட்டுமே வீழ்த்தியுள்ளது.

 

அதுவும் கடந்த மே மாதம் ஆசியான் கிளப் சாம்பியன்ஷிப் இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டத்தில் 2-1 என வென்றதே.

 

JDT, Buriram மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை இன்று இரவு மணி 7.30 தொடங்கி Astro Arena Bola அலைவரிசை 803ரில் காணலாம்.

 

--

புதிய பயிற்றுநர் Matthias Jaissle தலைமையில் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது Newcastle !

 

இன்று அதிகாலை பிரிமியர் லீக் ஆட்டத்தில் லீட்ஸ் உடன் மோதிய அவ்வணி 1-4  என வீழ்ந்தது.

 

ஆட்டத்தின் இறுதியில் Bazoumana Touré ஆறுதலுக்கு ஒரு கோல் அடித்தாலும், நியூகாஸல் புள்ளிப்பட்டியலில் 12வது இடத்துக்கு சரிந்துள்ளது.

 

--

ஜப்பானில் நடைப்பெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு பதக்கமாவது வெல்ல வேண்டும் !

அப்படி ஒரு இலக்கு கொண்டுள்ளதாக தேசிய ஆடவர் இரட்டையர் பிரிவு வீரர் Aaron Chia தெரிவித்துள்ளார்.

 

புதிய இணையான Tee ki wun-னோடு கை கோர்த்துள்ள அவர், எதிரணிகள் தங்களின் விளையாட்டு முறையை எளிதில் கணிக்க முடியாது என கூறினார்.

 

எனவே, அதிக அழுத்தம் இல்லாமல் அமைதியாக விளையாட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

--

RAAGA Aaha Siranta Isai!