Skip to main content

Advertisement

JDT இந்த யுக்திகளைக் கையாள வேண்டும்!

Buriram Unitedடுக்கு எதிராக தனது ஆசிய Champions  லீக் Elite கால்பந்தாட்ட பயணத்தைத் தொடக்கவிருக்கிறது JDT!

இப்பருவத்திற்கான முதல் மூன்று புள்ளிகளை கொடுக்கும் அவ்வாட்டம் இன்று இரவு ஜொகூர் Sultan Ibrahim அரங்கில் நடைபெறவிருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க, JDT அந்த தாய்லாந்து கிளப்புக்கு எதிராக என்ன என்ன யுக்திகளைக் கையாள்வது சிறப்பு என்பது குறித்து கருத்துரைத்துள்ளார் நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் Safee Sali..

JDT, Buriram மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை இன்று இரவு மணி 8.05 தொடங்கி Astro Arena Bola அலைவரிசை 803ரில் காணலாம்.

--

அணியின் கேப்டனான Dean Henderson-க்கு புதிய ஒப்பந்தம் வழங்க, Crystal Palace பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023-ல் Man United-ல் இருந்து வந்த Henderson, இதுவரை 119 போட்டிகளில் விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

--

ஜப்பானில் நடைப்பெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு பதக்கமாவது வெல்ல வேண்டும் என இலக்கு கொண்டுள்ளார் தேசிய ஆடவர் இரட்டையர் பிரிவு வீரர் Aaron Chia !

புதிய இணையான Tee ki wun-னோடு கை கோர்த்துள்ள அவர், எதிரணிகள் தங்களின் விளையாட்டு முறையை எளிதில் கணிக்க முடியாது என்றும் எனவே, அழுத்தம் இல்லாமல் அமைதியாக விளையாட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

RAAGA Aaha Siranta Isai!