Skip to main content

Advertisement

இங்கிலாந்து பலவீனமா ?

 

2026 கால்பந்து திருவிழா குறித்த செய்திகள்

அர்ஜென்டினாவின் அனுபவமும், ஆட்டத்தை கையாளும் திறனும், இங்கிலாந்தை வீழ்த்த முக்கிய காரணமாக அமைந்ததுள்ளது !

உள்ளூர் கால்பந்து விமர்சகர் ஒருவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று அரையிறுதியில், அர்ஜென்டினா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதியாட்டத்துக்கு முன்னேறியது.

அவ்வாட்டத்தின் முக்கிய கட்டங்களில் அழுத்தத்தை கையாள முடியாமல், இங்கிலாந்து தடுமாறியதாக அவர் கூறினார்.

அர்ஜென்டினா வீரர்களோ, செம்மையான ஆட்ட யுக்தியுடன் விளையாடினர்.

அவரகள், தாக்குதல் நடத்த வேண்டிய நேரத்தையும், ஆட்டத்தின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டிய தருணத்தையும், சிறப்பாக கையாண்டதாக அவர் தெரிவித்தார்.

பெரிய போட்டிகளில் கிடைத்த அனுபவமும், வெற்றிக்கான தன்னம்பிக்கையும், அவ்வாட்டம், அர்ஜென்டினாவுக்கு சாதகமாக அமைந்ததாக அவர் கூறினார்.

இதனால், உலக மகுடத்தை வெல்லும், இங்கிலாந்தின் கனவு மீண்டும் முறிந்து போனது.

நட்சத்திர வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அணி, கடைசியாக, 1966-ஆம் ஆண்டு கால்பந்து திருவிழாவில் வெற்றிப் பெற்றது.

அப்போதிலிருந்தே இதுவரை, அவ்வணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.

---------

ஜப்பான் பொது பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் Jimmy Wong - Cheng Su Yin, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !

அதே வேளை, Goh Soon Huat - Shevon Lai-யும், ஆடவர் ஒற்றையர் Leong Jun Hao-வும், தோல்வியடைந்து, அப்போட்டியில் இருந்து வெளியேறினர்.

RAAGA Aaha Siranta Isai!