
2026 கால்பந்து திருவிழா குறித்த செய்திகள் !
இங்கிலாந்துடனான 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்துக்கு முன்னதாக, France, தன்னிடம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் !
உள்ளூர் கால்பந்து விமர்சகர் ஒருவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
காரணம், France, Counter attack எனும் எதிர்த்தாக்குதல் வேகம் மற்றும் தனிநபர் திறமையையே அதிகமாக நம்பியிருப்பதே, அதன் பலவீனமாக உள்ளதாக அவர் கூறினார்.
முக்கிய வீரர்கள் கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியாத சூழலில், மாற்று ஆட்ட முறைக்கு மாற முடியாதது, France-சின் ஒரு குறைபாடு என அவர் சொன்னார்.
அதே சமயம், இங்கிலாந்தோ, எதிரணியை குறைத்து மதிப்பிடாமல் விளையாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தோல்வியின் விளிம்பில் இருக்கும் அணி, எந்நேரத்திலும் களத்தில் சூடுபிடித்து பாய்ந்து, ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடும் என்பதை, இங்கிலாந்து நினைவில் கொள்ள வேண்டும், என்றாரவர்.
நேற்று Argentina-வுடனான அரையிறுதியாட்டத்தில் நடந்த சம்பவத்தை அவர் மேற்கோள்காட்டினார்.
55-ஆவது நிமிடத்தில் 1-0 என்ற முன்னிலை பெற்ற பின்னர், இங்கிலாந்து, தாக்குதல் ஆட்டத்தை குறைத்து, தற்காப்பில் அதிக கவனம் செலுத்தியது.
இதனால், அர்ஜென்டினா, தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பைப் பெற்ற வேளை, இங்கிலாந்து வீரர்களும் களைப்படைந்தனர்.
இதன் விளைவாகவே, ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், அர்ஜென்டினா இரண்டு கோல்களைப் போட்டு, இறுதியாட்டத்துக்கு முன்னேறியது.
வரும் ஞாயிற்றுக்கிழமை, 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில், France-சும், இங்கிலாந்தும் மோதுகின்றன.
--------
ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் சீ விளையாட்டுப் போட்டிகளைத் தவிர, மற்ற சிறிய சிறைய போட்டிகளிலும் கவனம் செலுத்துவது முக்கியம் என்கிறார், தேசிய கராத்தே வீராங்கனை, ஷாமலராணி சந்திரன் !
அது, உலகத் தரவரிசையில் முன்னேறி வர உதவும் என அவர் கூறினார்.
இவ்வேளையில், ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகளும், ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
அது போக, அடுத்தாண்டு மலேசியாவில் நடைபெறவுள்ள சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வதே, தனது தலையாய நோக்கம் என, அவர் சொன்னார்.
அண்மையில் வியட்நாமில் நடைபெற்ற தென்கிழக்காசிய கராத்தே சம்மேளன போட்டியில், மகளிருக்கான 50 கிலோகிராம் எடைக்குக் குறைவான பிரிவில், 27 வயதான ஷாமலா தங்கம் வென்றார்.
அப்போட்டியில் அவர் 7-ஆவது முறையாக தங்கம் வெல்வது குறிப்பிடத்தக்கது.