
சீன பொது Squash போட்டியில் தேசிய தாரகை S சிவசங்கரி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளார்!
இரண்டாம் சுற்றில் அவர்கள் எகிப்து வீராங்கணையை வீழ்த்தினார்.
அவருடன், France வீரரை வீழ்த்தித Ng Eain Yowவும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் அவ்விருவருமே முறையே எகிப்தி வீரர் வீராங்கணையைச் சந்திக்க அட்டவணையிடப்பட்டுள்ளனர்.
------
Hong Kong பொது பூப்பந்து போட்டியில் எட்டு தேசிய பிரதிநிதிகள் நேற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதிப் பெற்றனர்!
ஆடவர் இரட்டையர் Man Wei Chong- Tee Kai Wun ஆகியோரும் அதிலடங்குவர்.
அவர்களுடன் மகளிர் இரட்டையர் Pearly Tan M Thinaah, மற்றும் ஆடவர் இரட்டையர் Chia Wei Jie-Teo Ee Yi இன்று இரண்டாம் சுற்றில் களமிறங்கவிருக்கின்றனர்.
Hong Kong பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை இன்று காலை 9 மணி தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம்.
------
ஆசிய Tenpin Bowling போட்டியின் ஆடவருக்கான மூன்று பேர் கொண்ட குழு பிரிவில் மலேசியா வாகை சூடியுள்ளது!
இதையடுத்து கட்டாரில் நடைபெறும் அப்போட்டியில் மலேசியா நான்காவது தங்கத்தை வென்றுள்ளது.
2019ஆம் ஆண்டு அப்போட்டியில் கிடைத்த பட்டத்தை மலேசியா தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து ஆகக் கடைசி விளையாட்டுச் செய்திகளையும், Stadiumastro.comமில் இன்றே தெரிந்துக் கொள்ளுங்கள்.