
சீனா பொது Squash போட்டியில் வெற்றியைக் கொண்டாடிய தேசிய தாரகை S.சிவசங்கரி, அடுத்ததாக Hong Kong பொது Squash போட்டியில், கவனம் திருப்பியுள்ளார் !
அந்தப் போட்டி, நவம்பர் 30 முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
உலகத் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள சிவசங்கரி, சீனா பொது Squash போட்டியின்போது, தனது ஆட்டத்தில் பல சாதகமான முன்னேற்றங்களைக் கண்டதாகக் கூறினார்.
அந்த முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, Hong Kong-கில் நடைபெறவுள்ள Platinum தரத்திலான போட்டிக்கு, தனது ஆட்டத்திறனை மேலும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
---------
மலேசிய தேசியக் கால்பந்து அணி தலைமைப் பயிற்றுநராக, குரோஷியாவைச் சேர்ந்த Bojan Hodak நியமிக்கப்பட்டுள்ளார் !
மலேசியக் கால்பந்து சங்கம் FAM, இன்று அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
---------
Manchester United-டில், புதிய வீரர்களைச் ஒப்பந்தம் செய்ய, சுமார் 50 மில்லியன் பவுண்ட் நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது !
இந்த குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக, நிர்வாகி MAURICIO Pochettino விரும்பும் வீரர்களை அணிக்குக் கொண்டுவருவதில் சவால்கள் ஏற்படலாம்.
ஜனவரியில் வரும், ஆட்டக்காரர்களை வாங்கும் விற்கும் தவணையில், 3 முக்கிய பகுதிகளுக்கு புதிய வீரர்களை வாங்க, அவர் திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக, தாக்குதல் ஆட்டக்காரர், தற்காப்பு ஆட்டக்காரர் உள்ளிட்டோரை, அணியில் சேர்க்க Pochettino இலக்கு வைத்துள்ளார்.
---------
Real Madrid-டுடனான Jude Bellingham-மின் ஒப்பந்த நீட்டிப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் தெரிகிறது !
மேலும் ஐந்து ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.