Skip to main content

Advertisement

அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் Pochettino !

 

Manchester United-டை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுவர, புதிய நிர்வாகி Mauricio Pochettino உறுதி பூண்டுள்ளார் !

அதே சமயம், அணி ரசிகர்களிடையே இழந்துபோன மகிழ்ச்சியையும் பெருமையையும் மீட்டெடுப்பதே தனது இலக்கு என Pochettino தெரிவித்தார்.

யுனைடட்டை, மீண்டும் வலுவான அணியாக உருவாக்க, வீரர்களும் ரசிகர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வீரர்கள், களத்தில் முழு அர்ப்பணிப்புடன் விளையாடி, அணிக்குத் தேவையான வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்றும் Pochettino கேட்டுக்கொண்டார்.

---------

இதனிடையே, Barcelona-வின் Alejandro Balde-வை, Manchester United இரவல் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யலாம் !

ஜனவரியில், அந்த தற்காப்பு ஆட்டக்காரர், யுனைடட்டுக்கு வரலாம் என கூறப்படுகிறது.

அதே வேளை, யுனைடட், தாக்குதல் அரணையும் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றது.

----------

Hong Kong பொது பூப்பந்து போட்டியில், தேசிய மகளிர் இரட்டையர் Pearly tan - M.Thinaah, ஆடவர் இரட்டையர் Man Wei Chong - Tee Kai Wun ஆகியோர், காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !

அதே வேளை, ஆடவர் இரட்டையர்களான Mohd Azriyn Ayub - Tan Wee Kiong, Aaron Tai - Yap Roy king ஆகியோர், தோல்வியுற்று, அப்போட்டியில் இருந்து வெளியேறினர்.

RAAGA Aaha Siranta Isai!