Skip to main content

Advertisement

அதிவேக வீரர் ஹாரி கேன் !

2026 Aichi-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தேசிய மகளிர் ஹாக்கி அணி அபார வெற்றியோடு தொடக்கியுள்ளது! 

A குழு பிரிவு ஆட்டத்தில் அது, Kazakhstan-ஐ 5-0 என வீழ்த்தியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே தேசிய அணி நம்பிக்கையோடு ஆடியதோடு, எதிரணியின் தாக்குதலுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

திங்கட்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் பிரிவு ஆட்டத்தில் மலேசியா, வங்காளதேசத்தை எதிர்கொள்ளும்.

இதனிடையே, 2026 Aichi-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவைக் காணத் தவறாதீர்கள்.

அந்நிகழ்வின் நேரடி ஒளிப்பரப்பை Astro ARENA, Stadiumastro, ஆஸ்ட்ரோவின் மேலும் ஐந்து பிரத்யேக அலைவரிசகள் மற்றும் Astro Goவில் காணலாம்.

--

இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்தாட்டத்தில் இன்று இரவு Tottenham ஆஸ்டன் வில்லாவை எதிர்கொள்ளவுள்ளது !

 

2026-27 பருவத்தில் அவ்விரு அணிகளுமே பிரீமியர் லீக்கில் ஒரு வெற்றியைக் கூடப் பெறவில்லை.

 

ஸ்பர்ஸ் தற்போது புள்ளிப்பட்டியலில் 17வது இடத்தில் உள்ள நிலையில் வில்லா 19 வது இடத்தில் இருக்கிறது.

 

ஸ்பர்ஸ் வில்லா மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை இரவு மணி 7:30 தொடங்கி ஆஸ்ட்ரோ அலைவரிசை 810, 811 மற்றும் சூக்காவில் காணலாம்.

 

--

 

இதனிடையே, இன்று அதிகாலை ஆட்டத்தில் செல்சியின் வலுவற்ற தற்காப்பு அரண் Brentford-க்குச் சாதகமானது !

அது Chelsea ஐ 3-0 என வீழ்த்தியது

பிற்பாதி ஆட்டம் சூடு பிடித்த வேளை, அனைத்து கோல்களும் அடிக்கப்பட்டன.

தற்காப்பு வீரர் Jaidon Anthony, தாக்குதல் வீரர் Igor Thiago, மத்திய திடல் வீரர் Fabio Carvalho,  Brentford-டுக்கான அந்த மூன்று கோல்களையும் போட்டனர்.

--

Bundesliகாவில் 100 கோல்களை அடித்த அதிவேக வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் தாக்குதல் வீரர் ஹாரி கேன் !

அவரது இரட்டைக் கோல்கள் வழி Bayern Munich, Union Berlin-ஐ 7-0 என பந்தாடியது.

RAAGA Aaha Siranta Isai!