Skip to main content

Advertisement

அனல் பறக்கும் England - Argentina ஆட்டம் !

 

2026 கால்பந்து திருவிழா குறித்த செய்திகளைக் காண்போம் !

Atlanta-வில் நடைபெறவுள்ள இங்கிலாந்து - அர்ஜென்டினா இடையிலான அரையிறுதியாட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுப்பத்தப்பட்டுள்ளது !

பரம வைரியான அவ்விரு அணிகளும் மோதுவதே அதற்குக் காரணம்.

1,600 அதிகாரிகள் களமிறக்கப்படவுள்ளதாக, Atlanta காவல்துறை கூறியது.

1980-களின் தொடக்கத்தில் நிகழ்ந்த Falklands போர் பின்னணிக்குப் பிறகு, இங்கிலாந்து - அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான பல ஆட்டங்கள், சர்ச்சைக்குரியவையாகவே அமைந்துள்ளன.

1986-ஆம் ஆண்டு காற்பந்து திருவிழாவில், அர்ஜென்டினா ஜாம்பவான் Diego Maradona, இங்கிலாந்துக்கு எதிராக அடித்த சர்ச்சைக்குரிய Hand of God கோல், இன்றும் நினைவுகூரப்படுகிறது.

அதேபோல், 12 ஆண்டுகளுக்குப் பின்னர், 1998 காற்பந்து திருவிழாவில், அர்ஜென்டினா வீரர் Diego Simeone-வுடன் ஏற்பட்ட மோதலில், அவரைத் தாக்கியதற்காக, இங்கிலாந்தின் David Beckham சிவப்பு அட்டை பெற்றார்.

--------

இதனிடையே, அர்ஜென்டினாவை மோதும் நாளைய ஆட்டம், இங்கிலாந்துக்குக் கடுமையாக இருக்கலாம் !

Lionel Messi-யை கோல் போட விடாமல் எப்படியாவது தடுத்த நிறுத்த முயன்றாலும், அவரைப் போலவே கோலடிக்கக்கூடிய நிறைய வீரர்கள் உள்ளதால், இங்கிலாந்து, ஒட்டு மொத்த அர்ஜென்டினாவையே சமாளிக்க வேண்டி வரும் என, உள்ளூர் கால்பந்து விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோல் மன்னனான Messi, இந்த திருவிழாவில் இதுவரை 8 கோல்களை போட்டு, முன்னிலையில் உள்ளார்.

----------

ஜப்பான் பொது பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர்களான  Goh Soon Huat - Shevon Lai, Jimmy Wong, Cheng Su Yin, 2-ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் !

மகளிர் ஒற்றையர் K.லெட்ஷனா தோல்வியுற்றார்.

Mohd Azriyn Ayub - Tan Wee Kiong-கும் தோற்றார்.

RAAGA Aaha Siranta Isai!