Skip to main content

Advertisement

ஆசிய விளையாட்டு ; மலேசியாவுக்கு முதல் தங்கம் !

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில், நாட்டுக்காக முதல் தங்கத்தை வென்று கொடுத்துள்ளார், தேசிய கராத்தே வீராங்கனை Adeola Fay Robert !

அவர், மகளிருக்கான 55 கிலோகிராமுக்குக் குறைவான குமித்தே பிரிவின் இறுதியாட்டத்தில், ஈரான் வீராங்கனையை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.

இவ்வேளையில், ஞாயிற்றுக்கிழமையே மலேசியாவுக்காக முதல் பதக்கத்தை எடுத்துக் கொடுத்த, தேசிய கராத்தே வீரர் தேவேந்திரன் கல்யாண சுந்தரம், அப்போட்டியில் கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் !

என்னதான் பலமுறை பல நாட்டு வீரர்களுடன் சண்டை போட்டாலும், இந்த போட்டியில் தாம் எதிர்கொண்ட வீரர்களின் ஆட்டம் கடைசி வரைக்குமே, சூடுபிடித்து மட்டுமே இருந்ததாக தேவேந்திரன் சொன்னார்.

களத்தில் இறங்குவதற்கு முன் ஒருவித பதற்றம் இருந்தபோதிலும், தன்னால் இயன்ற சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை வென்றதாக தேவேந்திரன் கூறினார்.

55 கிலோகிராமுக்கு குறைவான ஆடவர் குமித்தே பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற தேவேந்திரன், தனது முயற்சி, அதோடு நின்றுவிடாமல், மேலும் தொடரும், என்றாரவர்.

தேவேந்திரனுக்கு, இதுதான் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

---------

இவ்வேளையில், அப்போட்டியில் இரண்டாவது பதக்கத்தை வென்று கொடுத்த, சூரியா சங்கர் ஹரி சங்கர், இன்னும் பெரிய பெரிய போட்டிகளில் வெற்றி பெற்று, தமது முக்கிய இலக்குகளை அடையப் பாடுபடுவேன், என்றார் !
 
சூரியா, 60 கிலோகிராமுக்கு குறைவான ஆடவர் குமித்தே பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்றார்.

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், காயம் காரணமாக ஆரம்ப சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிய சூரியாவுக்கு, இம்முறை பதக்கம் வென்றது பெருமையளிப்பதாக அவர் சொன்னார்.

--------

இதனிடையே, ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கத்தை வெல்லும் முனைப்புடன், தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை S. Sivasangari களமிறங்குகிறார் !

இந்தப் போட்டி, 2028 Los Angeles ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான முக்கிய வாய்ப்பாகவும் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை, Astro ARENA, Stadiumastro, ஐந்து பிரத்தியேக அலைவரிசைகள் மற்றும் Astro Go-வில் காணலாம்.

RAAGA Aaha Siranta Isai!