Skip to main content

Advertisement

உலகக் கிண்ணம் ; Lionel Messi சேர்க்கப்பட்டுள்ளார் !

 

இவ்வாண்டு உலகக் கிண்ணத்துக்கான 55 வீரர்கள் கொண்ட ஆரம்ப பட்டியலில், காற்பந்து ஜாம்பவான் Lionel Messi-யும் உள்ளார் !

Messi, இன்னும் இரண்டு போட்டிகளில் கலந்து கொண்டால், 200 அனைத்துலக ஆட்டங்களில் பங்கேற்ற சாதனையை எட்டுவார்.

போர்ச்சுகல் நட்சத்திரம் Cristiano Ronaldo  இதை ஏற்கனவே சாதித்துள்ளார்.

மேலும் 10 பிரீமியர் லீக் வீரர்களும் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Enzo Fernandez, Alejandro Garnacho, Emiliano Martinez, Lisandro Martinez உள்ளிட்டோர் அவர்களில் அடங்குவர்.

---------

Real Madrid-டுக்கு மீண்டும் செல்ல Jose Mourinho தயாராக உள்ளாராம் !

ஆனால் அதற்கு அவர் இரண்டு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

அணிக்கு எந்த பகுதிகள் வலு தேவை என்பதை தீர்மானிப்பதில், தனிப்பட்ட வீரர் பெயர்களை விட, அவருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என விளையாட்டுச் செய்திகள் கூறுகின்றன.

இரண்டாவதாக, அவர் மற்றும் அவரது பயிற்சி குழுவினர், தங்கள் பணியை, நிர்வாகக் குழுவின் தலையீடு இல்லாமல் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும், என்பதாகும்.

வார இறுதியில் பார்சிலோனாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, பார்சிலோனா லா லிகா பட்டத்தை வென்றதால், Real-லின் இந்த பருவம் குழப்பத்தில் மூழ்கியுள்ளதை அடுத்து, அந்நிலை உருவாகியுள்ளது.

---------

PSG வீரர் Ousmane Dembele, தொடர்ந்து இரண்டாவது முறையாக French  லீக் ஆண்டின் சிறந்த வீரர் விருதைப் பெற்றுள்ளார் !

தொடர்ச்சியாக ஈராண்டுகள் அந்த விருதைப் பெற்ற ஐந்தாவது வீரராக, அவர் விளங்குகிறார்.

RAAGA Aaha Siranta Isai!