
Spain மற்றும் அர்ஜென்டினாவுக்கு இடையிலான கால்பந்து திருவிழா இறுதியாட்டம், இம்முறை மிகச் சிறந்த இறுதியாட்டங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது !
இரு அணிகளும், வெவ்வேறு ஆட்டத் தத்துவங்களைக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என, உள்ளூர் கால்பந்து விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Spain, பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, ஆட்டத்தின் வேகத்தைத் தீர்மானிக்க முயற்சிக்கும் எனக் கூறிய அவர், குறிப்பாக அது இரு பக்கப் பகுதிகளிலும் மேற்கொள்ளும் தாக்குதல்கள், எதிரணிக்கு பெரும் சவாலாக அமையும், என்றார்.
அர்ஜென்டினாவோ, சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது.
ஆட்டத்தின் முக்கிய தருணங்களில், குறிப்பாக முற்பாதியின் இறுதி அல்லது ஆட்டத்தின் கடைசி நேரங்களில், எதிர்பாராத வகையில் சூடு பிடித்து பாயும் திறன், அங்த ஜாம்பவான் அணியிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அவரின் கணிப்பின் படி, இறுதியாட்டம், கூடுதல் நேரத்துக்குப் பிறகு, 2-1 என்ற கோல் கணக்கில் Spain-னை வீழ்த்தி, அர்ஜென்டினா தனது வெற்றிப் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமாம்.
-----------
செப்டம்பரில் ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தாம் தயாராகி வருவதாக, தேசிய கராத்தே வீராங்கனை ஷாமலராணி சந்திரன் தெரிவித்துள்ளார் !
பலவிதமான திறைமைகளைக் கொண்ட வீரர்கள் அப்போட்டியில் பங்கேற்பதால், முழுமையான பயிற்சிகள் தேவை என ஷாமலா சொன்னார்.
அதே போல், அடுத்தாண்டு சீ விளையாடுப் போட்டியில், தங்கம் வெல்வதே தனது மிகப் பெரிய இலக்காக உள்ளதாக ஷாமலா சொன்னார்.
அம்மாதிரியான பெரிய போட்டிகளைத் தவிர்த்து, மற்ற சிறு சிறு போட்டிகளும் முக்கியம் தான் ; காரணம் அவர், உலகத் தரவரிசையில் சிறந்த புள்ளிகளைப் பெற்று மேலே ஏற உதவும் என அவர் சொன்னார்.
அண்மையில் வியட்நாமில் நடைபெற்ற தென்கிழக்காசிய கராத்தே சம்மேளன போட்டியில், மகளிருக்கான 50 கிலோகிராம் எடைக்குக் கீழ்ப்பட்ட பிரிவில், 27 வயதான ஷாமலா தங்கம் வென்றார்.
அப்போட்டியில் அவர் 7-ஆவது முறையாக தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
---------
ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதியில், தேசிய ஆடவர் இரட்டையர் Goh Sze Fei - Nur Izzuddin, கொரிய இணையை சந்திக்கின்றனர்.
ஜப்பான் பொது பூப்பந்து போட்டியை, இப்போது, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.