
இப்பருவ Spain La Liga வெற்றியாளர் பட்டத்தை வாகை சூடியிருக்கிறது Barcelona!
Real Madridடுடனான El Classico ஆட்டத்தில், Barca 2-0 என வெற்றிப் பெற்று, புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகள் வீத்தியாசத்தில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
Barcaவுக்கான அந்த இரு கோல்களையும், முற்பாதியிலேயே Marcus Rashford
டும் Ferran Torresசும் போட்டனர்.
இது அந்த Spain ஜாம்பவானின் 29ஆவது La Liga கிண்ணமாகும்.
-----
English Premier லீக்கில் Arsenal 1-0 என West Hamமை வீழ்த்தி, வெற்றியாளர் பட்டத்தை நெருங்குகிறது!
அவ்வணியுடன் ஐந்து புள்ளிகள் குறைவாகக் கொண்டு, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள Man Cityக்குக் கையில் ஓராட்டம் இருக்கிறது.
--
மற்ற ஆட்டங்களில் Burnley, 2-2 என Aston Villaவுடன் சமநிலை கண்டது!
Crystal Palace, 2-2 என Everton-னுடன் சமநிலை கண்டது.
Nottingham Forest 1-1 என Newcastleலுடன் சமநிலை கண்டது.
-
Giza-வில் நடைபெறும் உலக தொழில்முறை squash சங்கப் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் தேசிய நட்சத்திரம் S சிவசங்கரி!
இரண்டாம் சுற்றில் சக மலேசிய வீராங்கணையான Aira Azman-னை நேரடி செட்களில் வீழ்த்திய அவருக்கு, மூன்றாம் சுற்றில் பெல்ஜிய வீராங்கணையிடமிருந்து கடும் சவால் காத்திருக்கின்றது.
-----
France MotoGPயில் Jorge Mortin வாகை சூடினார்.