
Spain La Liga ஆட்டத்தில் முதலிடம் வகிக்கும் Barcelona, Real Madridடுடனான El Classico ஆட்டத்தில் குறைந்தது சமநிலை கண்டாலோ போதும்.
வெற்றிப் பட்டம் அதற்குச் சொந்தமாகிவிடும்.
லீக் முடிய இன்னும் 4 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், Barca 11 புள்ளிகள் வித்தியாசத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
அவ்வாட்டத்தின் நேரடி ஒளிபரப்பை அதிகாலை மூன்று மணி தொடங்கி Astro அலைவரிசை 820 மற்றும் சூக்காவில் காணலாம்.
--
English Premier லீக் ஆட்டத்தில்
Man City 3-0 என Brentfordடை வீழ்த்தியது.
Brighton 3-0 என Wolvesசைத் தோற்கடித்தது.
Bournemouth 1-0 என Fulhamமை வென்றது.
Man United, Sunderlandடுடன் கோலின்றி சமநிலை கண்டது.
Liverpool, Chelseaயுடன் 1-1 என சமநிலை கண்டது.
--
பாதம் மற்றும் தோள்பட்டையில் காயமடைந்த Ducati ஓட்டுனர் Marc Marquez, இன்றைய France MotoGPயையும், அடுத்த வாரத்தின் Catalan GPயையும் தவறவிடக்கூடும்!
France GPயின் நேரடி ஒளிபரப்பை இன்றிரவு மணி 7.15 தொடங்கி, Astro அலைவரிசை 817 மற்றும் சூக்காவில் காணலாம்.