Skip to main content

Advertisement

காமல்வெல்த்: ஐந்து தங்கப் பதக்க இலக்கு வைத்தது மலேசியா!

காமன்வெல்த் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களை வெல்ல இலக்கு கொண்டுள்ளது மலேசியா!

பூப்பந்து, முக்குளிப்பு Squash என, தேசிய விளையாட்டாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள சில விளையாட்டுகள் இம்முறை அப்போட்டியில் இருந்து நீக்கப்பட்டாலும், அந்த இலக்கில் உறுதியாக இருப்பதாக அப்போட்டிக்கான தேசிய அணி தலைவர் தெரிவித்தார்.

இதனிடையே இன்று தொடங்கும் 2026 Glagow காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் ஒளிபரப்பை RTM விரிவுப்படுத்தியிருக்கிறது.

இன்று தொடங்கி ஆகஸ்டு 2ஆம் தேதி வரை நடைபெறும் அப்போட்டியை RTMKlik மற்றும் Astro வில் காணலாம்.

இந்த வலுப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மூலம், Glasgowவில் 22 பாரா விளையாட்டாளர்கள் உட்பட, மொத்தம் 59 மலேசிய விளையாட்டாளர்களின் பயணத்தை ,TV Okey அலைவரிசை 146 மற்றும் சுகான் plus அலைவரிசை 806றில் காணலாம்.

------

2026 சிலாங்கூர் சுக்மா விளையாட்டுப் போட்டி, 67 விழுக்காட்டு செலவைக் குறைத்துள்ளது!

 

எனினும், விளையாட்டாளர்களின் பாதுகாப்பிலும் நலனிலும், அப்போட்டியின் தரத்திலும் எந்த குறையும் இருக்காது என இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது. 

 

----- 

புதிய EPL பருவத்தை Arsenal, William Saliba இன்றி தொடக்கக்கூடும்!

முதுகில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வில் இருந்த ந்த தற்காப்பு வீரரின் ஓய்வு காலத்தை மருத்துவர்கள் நீட்டித்துள்ளதே அதற்குக் காரணம்.

எனினும் அந்த 25 வயது ஆட்டக்காரருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லையாம்.

---- 

மூத்த Mexico கோல் காவலர் Guillermo Ochoa தனது 41ஆவது வயதில் தொழில்முறை கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Mexico தேசிய அணியில் அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேல் சேவையாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

RAAGA Aaha Siranta Isai!