
2026 கால்பந்து திருவிழாவை அரங்கிற்கு வந்து பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது!
தொடக்க கட்ட தகவல்கள் படி ஒட்டுமொத்தமாக 68 லட்சம் பேர் அமெரிக்கா, கெனடா மற்றும் Mexicoவில் 104 ஆட்டங்களைக் காண திரண்டிருப்பதாகத் தெரிகிறது.
டிக்கட் விலை அதிகம் என்ற புகார்களுக்கு நடுவே, சராசரியாக அரங்கின் இருக்கைகள் 99 விழுக்காடு நிறப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தொலைக்காட்சியில் கால்பந்து திருவிழாவை கண்டு களித்தவர்களின் எண்ணிக்கை, இதுவரை பதிவானதை விட பன்மடங்கு அதிகம் என, ஏற்பாட்டுக் குழு தெரிவித்திருக்கின்றது.
-------
இதனிடையே Spain-னுடனான இறுதியாட்டத்திற்குப் பிறகு திடலில் அமளி துமளியில் ஈடுபட்டதை அடுத்து அர்ஜெண்டினா மீது விசாரணை தொடங்கியிருக்கிறது!
அதில் சம்பந்தப்பட்ட எந்த வீரர் அல்லது நிர்வாகியும் பணி நீக்கப்படலாம் என்றும், அர்ஜெண்டினா கால்பந்து சம்மேளனம் அபராதத்தை எதிர்நோக்கலாம் என்றும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
1-0 என வெற்றிப் பெற்ற Spain தனது வெற்றியைக் கொண்டாடி கொண்டிருந்த போது, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சிலர் அதனுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-----
மற்றொரு நிலவரத்தில் Liverpool மற்றும் இங்கிலாந்து சகாப்தம் Kevin Keegan, புற்றுநோய் காரணமாக தனது 75ஆவது வயதில் காலமானார்.
இரு Ballon Dor விருதுகள், Premier லீக், Bundesliga யுரோப்பிய கிண்ணம், UEFA கிண்ணம், FA கிண்ணம் ஆகியவற்றை வென்ற பெருமை அவரைச் சேறும்.