
சீன பொது பூப்பந்து போட்டியில், ஆடவர் ஒற்றையர் Leong Jun Hao, 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் !
அவர் முதல் சுற்றில், இந்திய வீரரை தோற்கடித்து வெற்றிப் பெற்றார்.
ஆடவர் இரட்டையர் Man Wei Chong – Soh Wooi Yik, சக நாட்டு ஜோடியான Arif Junaidi – Kang Khai Xing-கை வீழ்த்தி, அடுத்த சுற்றில் கால் பதித்தனர்.
----------
தேசிய கலப்பு இரட்டையர் Jimmy Wong - Cheng Su Yin, ஆசிய விளையாட்டுப் போட்டியில், மலேசிய அணிக்காகக் களமிறங்க வாய்ப்பு கிடைத்தால், அதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர் !
Toh Ee Wei, காயத்தில் இருந்து மீண்டு வருவது, இன்னும் உறுதியாகாத நிலையில், அப்போட்டிக்கான மலேசிய கலப்பு இரட்டையர் அணியில், மாற்று தேர்வாக Jimmy Wong - Su Yin ஜோடி உருவெடுத்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற ஜப்பான் பொது பூப்பந்து போட்டியில் கூட, இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
-----------
2026 காற்பந்து திருவிழாவில் வெற்றிப் பெற்ற Spain தேசிய அணிக்கு, அந்நாட்டு மாமன்னர் நன்றி தெரிவித்துள்ளார் !
அவ்வணியின் வெற்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கே சொந்தமானது என்றும், வீரர்கள், தங்களின் துணிவு, விடாமுயற்சி மற்றும் திறமையை வெளிப்படுத்தி, இந்த சாதனையை படைத்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.
நேற்றைய இறுதியாட்டத்தில், Spain 1-0 என, அர்ஜென்டினாவை வீழ்த்தி, வெற்றி வாகை சூடியது.
------------
Newcastle-லில், Lewis Hall-லின் நிலைமையை Manchester United, கண்காணித்து வருகின்றதாம் !
அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிர்வாகி Michael Carrick, அந்த மத்தியதிடலாட்டக்காரரை ஒப்பந்தம் செய்ய குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
-------------
மத்தியதிடலாட்டக்காரர் Joao Gomes-சை, Wolves-சில் இருந்து ஒப்பந்தம் செய்துள்ளது Aston Villa !