
Manchester United, இப்பருவ இறுதியில் Chelsea-யின் Cole Palmer-ரை ஒப்பந்தம் செய்யும் எண்ணத்தில் இருந்து பின்வாங்கிக் கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன !
Palmer, இப்பருவ பிரிமியர் லீக்கில், வெறும் நான்கு பெனால்டி அல்லாத கோல்கள் மட்டுமே அடித்துள்ளதால், அவரை ஒப்பந்தம் செய்வது குறித்து, யுனைடட் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்துள்ளதாம்.
யுனைடட், கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பகுதியாக மத்திய திடல் அரண் விளங்குகிறது.
மத்தியதிடலாட்டக்காரர்களான Casemiro-வும், Manuel Ugarte-வும் இப்பருவத்தோடு அணியை விட்டு வெளியேறுவதே அதற்குக் காரணம்.
---------
Joao Palhinha-வை, Tottenham, நிரந்தரமாக்கிக்கொள்ளலாம் !
அந்த மத்தியதிடலாட்டக்காரரை, 27 மில்லியன் பவுண்ட் தொகையைக் கொடுத்து நிரந்தரமாக ஒப்பந்தம் செய்ய திட்டம் உள்ளதாக, Tottenham நிர்வாகி Roberto de Zerbi தெரிவித்துள்ளார்.
Bayern Munich வீரரான அவர், Tottenham-முக்காக இரவலில் விளையாடி வருகிறார்.
---------
2026 Sepak Takraw உலகக் கிண்ண போட்டியில், மலேசிய மூன்று பிரிவுகளில் இறுதியாட்டம் வரை செல்ல இலக்குக் கொண்டுள்ளது !
regu, குழு, quadrant ஆகியவையே அப்பிரிவுகளாகும்.
அப்போட்டி, மே 12 முதல் 24-ஆம் தேதி வரை, மலேசியாவிலேயே நடைபெறுகிறது.
மலேசியா உபசரணை நாடாக இருப்பதால், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மலேசியாவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என மலேசிய Sepak Takraw சம்மேளனம் தெரிவித்துள்ளது.