
Liverpool-லுக்கு எதிரான இன்றைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், சில Chelsea வீரர்கள் களமிறக்கப்படமாட்டார்கள் !
அவர்களில் , கோல்காவலர் Robert Sánchez-சும் அடங்குவார்.
அவர்கள் காயப் பிரச்சனையில் இருப்பதே அதற்குக் காரணம்.
இதனிடையே, அண்மையில், Manchester United-டுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த Liverpool, மீண்டெழுந்து திடலில் களமிறங்கவுள்ளது.
லிவர்பூல், புள்ளிப்பட்டியலில் United-டட்டை விட 6 புள்ளிகள் வித்தியாசத்தில் 4-ஆவது இடத்தில் உள்ளது.
Liverpool - Chelsea மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, இரவு மணி 7.30-க்கு, Astro அலைவரிசை 811-றிலும், Sooka-விலும், கண்டு களிக்கலாம்.
---------
மேலும் சில பிரிமியர் லீக் ஆட்டங்களும் உள்ளன !
Sunderland-டும் - Manchester United-டும், நேருக்கு நேர் மோதுகின்றன.
அவ்வாட்டத்தை, இரவு 10 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.
Fulham vs Bournemouth மோதும் ஆட்டத்தை, இரவு 10 மணிக்கு, அலைவரிசை 813-றில் பார்க்கலாம்.
---------
காற்பந்து எழுத்தாளர்கள் சங்கத்தின் பருவ சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார், Manchester United கேப்டன் Bruno Fernandes !
Arsenal மத்தியதிடலாட்டக்காரர் Declan Rice மற்றும் Manchester City நட்சத்திரம் Erling Haaland-டை கடந்து, Fernandes முன்னிலை பெற்றார்.
---------
மலேசிய சூப்பர் லீக் காற்பந்தாட்டத்தில், Imigresen FC 3-1 Terengganu FC-யை, வீழ்த்தியது !