Skip to main content

Advertisement

ஆடவர் ஒற்றையர் வீரர்கள் பற்றாக்குறையா ?

 

மலேசியாவுக்கு தரமான பூப்பந்து ஆடவர் ஒற்றையர் வீரர்கள் பற்றாக்குறை என எழுந்துள்ள கூற்றை, மலேசிய பூப்பந்து சங்கம் மறுத்துள்ளது !

அண்மையில் நடைபெற்ற தோமஸ் கிண்ணத்தில், சீனாவிடம் மலேசியா, 3-0 என தோல்வியடைந்து, 34 ஆண்டு கால வெற்றி வறட்சி நீடித்ததை அடுத்து எழுந்த அம்மாதிரியான கூற்றை, அதன் செயலாளர் மறுத்தார்.

சில ஆடவர் ஒற்றையர் வீரர்கள் காயப் பிரச்சனையில் இருப்பதும்மல்லாமல், சிலர் இன்னும் குணமடைந்து வருவதே, அந்த தோல்விக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.

இருப்பினும், அப்போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு ஆடவர் ஒற்றையர் வீரர்களில், Lee Zii Jia மட்டுமே குழு நிலை ஆட்டங்களில் அனைத்திலும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அவர் மேற்கோள்காட்டினார்.

-----------

இதனிடையே, தேசிய பூப்பந்து ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia,  தொடர்ந்து மலேசிய பூப்பந்து பயிற்சி நிலையத்தில், பயிற்சி மேற்கொள்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை !

அவர் தேசிய அணியுடன் இணைந்து பயிற்சி செய்வது வரவேற்கப்படுவதாக, BAM தெரிவித்துள்ளது.

----------

யுரோப்பா லீக் கிண்ணத்தைக் கைப்பற்றாவிட்டாலும் பரவாயில்லை, அதை அலட்டிக்கொள்ளாமல் அணியை மேம்படுத்தும் முயற்சிகளில் தாம் தொடர்ந்து ஈடுபடுவேன் என்கிறார், Aston Villa நிர்வாகி !

கடந்த மூன்று ஆண்டுகளில் வில்லா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து, தாம் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறினார்.

நாளை, Nottingham Forest-டுக்கு எதிரான யுரோப்பா லீக் இரண்டாம் கட்ட அரையிறுதியாட்டத்தில், Villa மோதவிருப்பது குறித்து பேசிய போது, அவர் அவ்வாறு சொன்னார்.

Aston Villa - Nottingham Forest மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 820-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

RAAGA Aaha Siranta Isai!