Skip to main content

Advertisement

Arsenal-லை விடாமல் துரத்தி வரும் Manchester City !

 

பிரிமியர் லீக் பட்டத்துக்கான போட்டியில், Arsenal-லை விடாமல் துரத்தி வரும் Manchester City, நாளை  Crystal Palace-சைச் சந்திக்கிறது !
 
தற்போது 5 புள்ளிகள் வித்தியாசத்தில் Arsenal-லை விட பின்தங்கியிருந்தும் சிட்டி, ஓராட்டம் குறைவாக ஆடியுள்ளது.

நாளை அது வெற்றிப் பெற்றால், Arsenal-லுடனான அதன் புள்ளி வித்தியாசம் 2-க்குக் குறைந்துவிடும்.

ஆக, இரு அணிகளுக்குமே எஞ்சியுள்ள இரு ஆட்டங்கள், இந்த பிரிமியர் லீக் பட்டத்தை யார் வெல்லப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.

இவ்வேளையில், நாளைய ஆட்டத்தின் முடிவு எதுவாக இருந்தாலும், Arsenal, அதற்கு எஞ்சியிருக்கும் ஈராட்டங்களிலும் வெற்றிப் பெற்றாலே, லீக் கிண்ணம் அதற்குச் சொந்தமாகிவிடும்.

Manchester City - Crystal Palace நேருக்கு நேர் மோதும் ஆட்டத்தை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811-றிலும், Sooka-விலும் நேரலையாகக் காணலாம்.

---------

Real Madrid வீரர் Federico Valverde-வை ஒப்பந்தம் செய்ய அடிபோடுகின்றதாம் Manchester United !

அண்மையில், Aurelien Tchouameni-வுடனான சண்டையில் Valverde-வுக்கு அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அப்படிப்பட்ட சூழலில், ரியால், Valverde மீது இன்னும் கோபமாக இருக்கலாம் என்பதால், பருவ இறுதியில் Real, அவரை மற்ற அணிக்கு கொடுக்க பரிசீலிக்கலாம் என விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.

---------

அவசர செய்தியாளர் சந்திப்பில், Real Madrid தலைவர், Florentino Perez தேர்தல் நடத்த அழைப்பு விடுத்துள்ளார் !

திடீரென செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்ததால், Perez பொறுப்பில் இருந்து விலகுகின்றாரா அல்லது Jose Mourinho-வை அடுத்த நிர்வாகியாக அறிவிப்பாரா என்ற ஊகங்கள் எழுந்தன.

ஆனால், Perez-சோ, தாம் பொறுப்பில் இருந்து விலகப் போவதில்லை என உறுதியாகக் கூறினார்.  

இப்பருவம் ரியால், ஒரு கிண்ணத்தை கூட கைப்பற்றாமல் போனதால், அக்கிளப்பில், இந்த அரசல் புரசலான நிலை ஏற்பட்டது. 

RAAGA Aaha Siranta Isai!