
France பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதிக்கு, ஒரு மலேசிய ஜோடி முன்னேறுவது உறுதியே !
2 தேசிய ஆடவர் இரட்டையர் ஜோடிகள், இன்று காலிறுதியில் நேருக்கு நேர் மோதவுள்ளதே அதற்குக் காரணம்.
Aaron Chia - Soh Wooi Yik, Man Wei Chong - Tee Kai Wun ஆகியோரே அவர்களாவர்.
Pearly Tan - M.Thinaah, புல்கேரியா நாட்டைச் சேர்ந்த மகளிர் ஜோடியுடன் மோதுகின்றனர்.
ஆடவர் இரட்டையர் Goh Sze Fei - Nur Izzuddin-னும் இன்று விளையாடுகின்றனர்.
France பொது பூப்பந்து போட்டியை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசைகள் 815, 816 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.
---------
Silicon Valley பொது Squash போட்டியின் அரையிறுதியில், கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிச் சுற்றில் வீழ்த்திய இந்திய வீராங்கனையைச் சந்திக்கின்றார், தேசிய தாரகை S. சிவசங்கரி !
அந்த இந்திய வீராங்கனையை வீழ்த்தி Sivasangari தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது
---------
2026 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் F20 குண்டு எறிதல் பிரிவில், தேசிய வீரர் Muhammad Ziyad Zolkefli வெள்ளிப் பதக்கம் வென்றார் !
--------
Ipswich Town-னுக்கு எதிரான நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், காயப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்திருக்கும் Nottingham Forest-டின் Morgan Gibbs-White களமிறங்குவார் என கூறப்படுகிறது !
Ipswich Town - Nottingham மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811-றிலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.