Skip to main content
மலேசியா புதிய சுற்றுலா சாதனை !

 

மலேசியா, இவ்வாண்டு முதல் காலாண்டில் புதிய சுற்றுலா சாதனையைப் பதிவு செய்துள்ளது !

அனைத்துலக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 5.4 விழுக்காடாக உயர்ந்து, மொத்தம் 10.64 மில்லியன் பயணிகள் வந்ததாக, சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, மலேசியாவில் முதல் காலாண்டில், 10 மில்லியனுக்கும் மேற்பட்ட அனைத்துலக சுற்றுப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

------------

பேராக் Pulau Pangkor-ரில், படகு கவிழ்ந்து காணாமல் போனவர்களில், மேலும் மூவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன !  

இதன் வழி கண்டெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது.

அப்படகில், சட்டவிரோத இந்தோனேசியர்கள் ஏறி வந்தது, முன்னதாக தெரிய வந்தது.

-----------

சிலாங்கூர் Bukit Kemuning-கில், ஓர் இளைஞரை அடைத்து வைத்து பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியதன் பேரில், காவல்துறை தேடி வரும் நபர், இதற்கு முன்பும் இதே போன்ற குற்றத்தில் தண்டிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது !

அந்த சந்தேகநபர், 2008-ஆம் ஆண்டில், Pandan Indah பகுதியில், ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, சட்டவிரோதமாக அடைத்து வைத்ததற்காக, 17 ஆண்டுகள் சிறைவாசம் பிடித்தார்.

சந்தேகநபர், பாதிக்கப்பட்ட 14 வயது பையனை ஏமாற்றி, தனது வீட்டில் பொருட்களை எடுத்துச் செல்ல உதவினால், அவனுக்கு தொலலைப்பேசி இணையப் பாக்கேஜ் வாங்கித் தருவதாகக் கூறி, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினார்.

----------

கோலாலம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான சிறப்பு வானிலை அறிவிப்புகளை, தற்போது ராகா உட்பட அஸ்ட்ரோவின் 4 வானொலி நிலையங்கள் வழியாக கேட்கலாம் !

வானிலை செயலிகள் இல்லாத பொதுமக்கள், குறிப்பாக மூத்தோருக்கு இது பெரிதும் உதவும் என, கூட்டரசு பிரதேச அமைச்சர்  Hannah Yeoh தெரிவித்துள்ளார்.

இந்த அணுகுமுறை, அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தகவல்களை விரைவாக வழங்கவும் உதவுகிறது.

4 மொழிகளில் ஒளிபரப்பப்படும் இந்தத் தகவல், ஒரு நாளைக்கு 3 முறை, அதாவது காலை மணி 9.30, பிற்பகல் மணி 2.30, மற்றும் மாலை மணி 5.30-க்கு ஒளிபரப்பப்படுகிறது.

----------

தாய்லாந்து, 93 நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா இல்லாமல் தங்கும் அனுமதி காலத்தை, 60 நாட்களிலிருந்து 30 நாட்களாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது !

இந்தத் திட்டம் அமைச்சரவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்; ஆனால், அதை அமலுக்குக் கொண்டு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தாய்லாந்து, 2024 ஜூலை மாதம் முதல், 93 நாடுகளுக்கான சுற்றுலா பயணிகளுக்கு, 60 நாள் விசா இல்லாமல் தங்கும் அனுமதியை வழங்கி வந்தது. 

RAAGA Aaha Siranta Isai!