
பலமான சீன அணிக்கு எதிரான நாளைய ஊபர் கிண்ண காலிறுதியாட்டத்தில், அனுபவமிக்க தேசிய வீராங்கனை M. Thinaah, களமிறக்கப்படமாட்டார் !
மலேசியா, அவரை ஓய்வில் வைத்துவிட்டு, இளம் வீராங்கனைகளுக்கு முக்கியமான அனுபவங்களை வழங்கும் நோக்கில், காலிறுதியில் அவர்களை களமிறக்க முடிவுச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுவே, மலேசியா, காலிறுதியில் வெற்றி கண்டால், அரையிறுதியில், தீனா மீண்டும் களமிறக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன் முறையாக மலேசியா ஊபர் கிண்ண காலிறுதியில் களமிறங்குகிறது.
ஊபர் கிண்ண பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும், கண்டு களிக்கலாம்.
---------
மலேசியா காற்பந்து லீக், Liga Malaysia அணிகளில் நீண்டகாலமாக இருந்து வரும் சம்பள நிலுவை பிரச்சினையை, இரண்டு பருவங்களுக்குள் முற்றிலுமாகத் தீர்க்க இலக்குக் கொண்டுள்ளது !
இதற்காக, நிதி நியாயமான விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பருவத்தில், முதன் முறையாக முழுமையாக அமல்படுத்தப்பட்ட விதிகளில், நல்ல முன்னேற்றத்தை காண்பதாக, மலேசிய காற்பந்து லீக் தெரிவித்துள்ளது.
ஆனால், அதன் பயன்கள் நீடிக்க, அனைத்து கிளப்புகளும் தொடர்ந்து உறுதியான ஒழுங்குமுறை மற்றும் நிதி கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என அது வலியுறுத்தியது.
--------
Aston Villa வீரர்கள் கடந்த கால அரையிறுதி தோல்விகளின் வேதனையை ஊக்கமாக மாற்றி, யூரோப்பா லீக் வெற்றியை நோக்கி பயணம் செய்ய வேண்டும் !
Nottingham Forest-டுக்கு எதிரான நாளைய முதற்கட்ட அரையிறுதியாட்டத்தில் Villa களமிறங்கவுள்ளதை அடுத்து, அதன் பயிற்றுனர் Unai Emery அவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த பருவத்தில், Champions லீக் காலிறுதிக்கு சென்ற அனுபவம் உட்பட, வில்லா அணிக்கு போதுமான அனுபவம் உள்ளது.
இதனால், இந்த முறை வெற்றியைப் பெறும் திறன் தமதணியிடம் உள்ளது என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Nottingham Forest - Aston Villa மோதும் ஆட்டத்தை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 820 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.