Skip to main content

Advertisement

ஊபர் கிண்ண பூப்பந்து போட்டி; மலேசியாவின் பயணம் முடிகிறது!

 

ஊபர் கிண்ண பூப்பந்து போட்டியில் மலேசியாவின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது! 

காலிறுதியில் தேசிய வீராங்கணைகள் சீனாவிடம் 0-3 என வீழ்ந்தனர். 

இதனிடையே, தேசிய அணியின் இந்த தோல்வி வெறும் தோல்வியாக மட்டும் பார்க்கப்படக் கூடாது. 

அது ஒரு பாடமாகும் என, தேசிய ஒற்றையர் பயிற்சி இயக்குனர் Kenneth Jonassen கூறியுள்ளார். 

16 ஆண்டுகளில் மலேசியா முதல் முறையாக அப்போட்டியின் காலிறுதிச் சுற்றில் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

-- 

இதனிடையே ஆடவருக்கான இன்றைய தாமஸ் கிண்ண பூப்பந்து போட்டியின் காலிறுதியில் தேசிய வீரர்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தேசிய பூப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் Datuk Kenny Goh கேட்டுக் கொண்டுள்ளார். 

நடப்பு வெற்றியாளரான சீனாவை அச்சுற்றில் தோற்கடிக்க வேண்டுமென்றால், ஒவ்வொருவருக்கும் அதில் பங்குண்டு என அவர் குறிப்பிட்டார். 

தாமஸ் கிண்ண பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை இன்று மாலை நான்கு மணி தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம். 

-- 

அதிகாலை யுரோப்பா லீக் முதல் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் Nottingham Forest 1-0 என Aston Villaவைத் தோற்கடித்தது! 

பிற்பாதியில் கொடுக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை Forest தாக்குதல் வீரர் Chris Wood வெற்றி கோலாக்கி, நிலைமையை தமதணிக்கு சாதகமாக்கிக் கொண்டார். 

-- 

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் கிளப்பான Braga 2-1 என ஜெர்மனியின் Freiburgகைத் தோற்கடித்தது. 

 

RAAGA Aaha Siranta Isai!