Champions லீக்கில் Bayern Munich-டம் தோல்வியடைந்ததையடுத்து, Real Madrid பயிற்றுநர் Álvaro Arbeloa ஆட்ட நடுவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆட்டத்தின் பிற்பாதியில் மத்திய திடல் வீரர் Eduardo Camavinga வுக்கு சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்டது முற்றிலும் நியாயமற்றதும் என்றும், அதுவே, ஆட்டத்தை பாழாக்கியது என்றும் அவர் கடிந்துள்ளார்.
இன்று அதிகாலை நடைப்பெற்ற இரண்டாம் கட்ட காலிறுதி ஆட்டத்தில் ,ரியால் Bayern Munich டம் 4-3 என வீழ்ந்தது.
ஒட்டு மொத்த கோல் கணக்கில், Bayern 6-4 என வெற்றி கண்டு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
--
யூரோப்பா லீக் இரண்டாம் கட்ட காலிறுதி ஆட்டத்தில், Aston Villa Bologna வைச் சந்திக்கிறது.
முதல் கட்ட ஆட்டத்தில், Bologna வை வில்லா அதன் சொந்த அரங்கிலே 3-1 என வீழ்த்தி முன்னிலை வகிக்கிறது.
Aston Villa Bologna மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை நாளை அதிகாலை மணி 3 தொடங்கி Astro அலைவரிசை 820 மற்றும் சூக்காவில் காணலாம்.
--
யூரோப்பா லீக் இரண்டாம் கட்ட காலிறுதி ஆட்டத்தில், Nottingham Forest Porto வைச் சந்திக்கிறது.
முதல் கட்ட ஆட்டத்தில், அவ்விரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என சமநிலைக் கண்டன.
Nottingham Forest Porto மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை நாளை அதிகாலை மணி 3 தொடங்கி Astro அலைவரிசை 822 மற்றும் சூக்காவில் காணலாம்.
--
UEFA Conference League இரண்டாம் கட்ட காலிறுதி ஆட்டத்தில், மூன்று கோல்கள் முன்னிலையில் உள்ள Crystal Palace Fiorentina வைச் சந்திக்கிறது.
Crystal Palace Fiorentina மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை நாளை அதிகாலை மணி 3 தொடங்கி Astro அலைவரிசை 821 மற்றும் சூக்காவில் காணலாம்.
--
Uber கிண்ண பூப்பந்து போட்டியில் இருந்து தேசிய மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனை Pearly Tan விலகுவதை மலேசிய பூப்பந்து சம்மேளனம் உறுதி செய்துள்ளது.
அவரது உடல்நிலை தாமதமாக மதிப்பிட்டதைத் தொடர்ந்து அது முடிவானதாக, அந்த இரட்டையர் பிரிவு பயிற்றூநர் தெரிவித்துள்ளார்.