இங்கிலீஷ்பிரிமியர் லீக் கால்பந்தாட்டத்தில், நாளை அதிகாலை Man City Burnley வைச் சந்திக்கிறது !
அவ்வாட்டத்தில், City 1-0 என வெற்றி பெற்றால் கூட முதலிடத்தில் இருக்கும் ஆர்செனலை, அது முந்தி விடலாம்.
புள்ளிப்பட்டியலில், தற்போது Gunners 70 புள்ளிகளுடன் முதலிடத்திலும் 67 புள்ளிகளுடன் சிட்டி இரண்டாம் இடத்திலும் உள்ளன.
கடந்த வாரத்தில் ஆட்டத்தில் City Arsenal-ஐ 1-2 என வீழ்த்திய உத்வேகத்திலே இன்னமும் உள்ளது.
இதனிடையே, Burnley 12 லீக் ஆட்டங்களில் வெற்றி பெறாமல் புள்ளிப் பட்டியலின் அடிமட்டத்திற்கு அருகில் தத்தளித்து வருகிறது.
Man City Burnley மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை நாளை அதிகாலை மணி 3 தொடங்கி Astro அலைவரிசை 810 மற்றும் சூக்காவில் காணலாம்.
--
உலக கிண்ண கால்பந்தாட்டத்தில், அணி வீரர் Lionel Messi Argentina-வுக்காக விளையாடுவாரா என்பது குறித்து இன்னும் உறுதிச் செய்யவில்லை!
ஆனால், அவர் அந்நாட்டை பிரிதிநிதிக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
Messi-யை அணியில் சேர்க்க முயற்சி செய்து வருவதாகவும், இறுதி முடிவு Messi-யிடமே இருப்பதாகவும் அணி பயிற்றுநர் Lionel Scaloni, தெரிவித்துள்ளார்.
--
Uber கிண்ண பூப்பந்து போட்டியில் இருந்து நீக்கப்பட்டதில், தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அது, மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் தேசிய கலப்பு இரட்டையர் வீராங்கனை Toh Ee Wei கூரியுள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள Ee Wei, தற்போது அடுத்த மாதம் நடைபெறும் மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார்.