
Manchester United-டின் இடைக்கால நிர்வாகி Michael Carrick-கின் கீழ் விளையாடுவது, தனக்கு அதீத நம்பிக்கையை ஏற்படுத்துவதாக, Kobbie Mainoo தெரிவித்துள்ளார் !
வெற்றிகள் எப்போதும் இல்லாவிட்டாலும், திடலில் ஒவ்வொரு நிமிடமும் தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றாரவர்.
கடந்த 12 ஆட்டங்களில் 11 முறை, அந்த மத்தியதிடலாட்டக்காரர் முன்னணியில் இடம் பெற்றார்.
அதே வேளை, இன்று Brentford-டுக்கு எதிராக, யுனைடட் 2-1 என வெற்றி கண்ட பிரிமியர் லீக் ஆட்டம் மட்டுமல்லாது, அண்மைய சில ஆட்டங்களிலும் அவர் செம்மையாக விளையாடியதாக, Carrick பாராட்டினார்.
----------
இதனிடையே, நிரந்தர நிர்வாகியைத் தேடும் பணியை, Manchester United தொடக்கியுள்ளதாக, பரவலாகப் பேசப்படுகிறது !
அப்பொறுப்பு, தற்போதைய இடைக்கால நிர்வாகி Michael Carrick-குக்கே வழங்கப்படலாம் என விளையாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யுனைடட்டின் இணை உரிமையாளர் Sir Jim Ratcliffe-உடன், அப்பொறுப்பு குறித்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் Carrick கூறிக்கொண்டார்.
யுனைடட்டை திறம்பட வழிநடத்தி வருவதால், Carrick அப்பொறுப்புக்கு பரிசீலிக்கப்படலாம் என பலர் கருதுகின்றனர்.
-----------
ஊபர் கிண்ண பூப்பந்து போட்டியில், மலேசியா காலிறுதிக்கு முன்னேறிய போதும், கேப்டனாக இருந்து தன்னால் ஒரு புள்ளியைக் கூட பெற்றுத் தர முடியாமல் போனது, பெருத்த வேதனையை ஏற்படுத்துவதாக, தேசிய வீராங்கனை எம். தினா தெரிவித்துள்ளார் !
நேற்றைய ஆட்டத்தில், 6 முறை வெற்றியாளரான ஜப்பான், குழு நிலை ஆட்டத்தில், 4-1 என மலேசியாவை வீழ்த்தி, முதலிடம் பிடித்தது.
முன்னதாக துருக்கியேவுக்கு எதிரான ஆட்டத்திலும், தினா ஜோடி, தோல்வியைத் தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.