Skip to main content

Advertisement

City-யை பாராட்டினார் Matheus Nunes !

 

Manchester City, மூன்று நாட்களுக்கு ஒருமுறை விளையாட பழகிய அணி என்பதால், எந்த மைதானம், எந்த போட்டி என்றாலும், வெற்றிக்காக முயற்சி செய்யும் என்கிறார், அதன் வீரர் Matheus Nunes !

இன்று Burnley-லுக்கு எதிரான பிரிமியர் லீக் ஆட்டத்தில் 1-0 என வெற்றிப் பெற்றதை அடுத்து, Nunes அவ்வாறு கூறினார்.

அந்த வெற்றிக்கு, சிட்டி மீதான வெளி அரங்கின் அதிகமான ஆதரவே காரணம் என்பதை மறுக்கவியலாது என அந்த மத்தியதிடலாட்டக்காரர் கூறினார்.

இதையடுத்து, Burnley, EPL-லில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

----------

Chelsea, புதிய நிர்வாகியைத் தேடி வருகிறது !

The Blues பரிசீலித்து வரும் பெயர்களில், Andoni Iraola-வும் அடங்குவார்.

The Blues-சில் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற 4-கே மாதங்களில் Liam Rosenior, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

----------

West Ham வீரர் Mateus Fernandes-சை வளைத்துப்போட அடிபோட்டு வரும் Manchester United-டுக்கு, தற்போது PSG தடை கல்லாக உருவெடுத்துள்ளது !

அந்த மத்தியதிடலாட்டக்காரரை ஒப்பந்தம் செய்வது குறித்து,  PSG, ஏற்கனவே அவரின் முகவர்களுடன் தொடர்பு கொண்டு பேசிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

RAAGA Aaha Siranta Isai!